
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் காற்றின் சுழற்சி காரணமாக (CYCLONIC CIRCULATION) புயல் உருவாக வாய்புள்ளது.

இதன் காரணத்தினால் தெற்கு வங்காள விரிகுடா கடலின் மையப் பகுதியில் வரும் 23-ஆம் தேதி ஒரு குறைந்த அழுத்த பகுதி (LOW PRESSURE AREA) உருவாகும் வாய்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த அழுத்த பகுதி, வரும் 48 மணி நேரத்திற்குள் தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் சற்று வலுவடைந்து பின்பு (DEPRESSION) குறைந்த அழுத்தமாக மாறும்.

மேலும் இது மேற்கு மற்றும் தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்து வரும் 48 மணி நேரத்திற்குள் இலங்கை மற்றும் தென் இந்திய கடல் கரையோரம் நோக்கி நகரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
+1
+1
+1
+1
+1
+1
+1
1
0 comment
Visitor Rating: 5 Stars