
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர், கட்சி ஒன்றை தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.

இதனை அறிந்த தமிழ் சினிமா நடிகர் விஜய் அந்தக் கட்சிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அந்தக் கட்சி சார்பில் நடத்தப்படும் நிகழ்வுகளில் தனது பெயர் உபயோக படுத்தப்படுமானால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முன் எச்சரிக்கை செய்தார். இது தந்தை மகனுக்கு இடையேயான பெரும் விரிசலை இந்த உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

இந்த நிலையில் நடிகர் விஜய்-யின் அப்பா எஸ்.ஏ.சி தொடங்கிய அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கட்சியின் மாநிலத் தலைவர் பத்மநாபன் என்கிற திருச்சி ஆர்.கே.ராஜா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால் கட்சியின் உறுப்பினராக தொடர்வேன் என்றும் ஆர்.கே.ராஜா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.