
ஐபிஎல் 13-வது சீசன் கடந்த 10-ஆம் தேதி முடிவடைந்தது. இந்தத் தொடரில் மிகவும் உற்று கவனிக்கப்பட்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் டி நடராஜனும் ஒருவர்.

யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் எனப் பெயர்பெற்ற நடராஜன், இந்த சீசனில் டெத் ஓவர்களில் அசத்தினார். துல்லியமான யார்க்கர் பந்துகளால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

எலிமினேட்டர் சுற்றில் டி வில்லியர்ஸை துல்லியமான யார்க்கர்களால் வீழ்த்தி அனைவரது பாராட்டையும் பெற்றார். இதனால் டி நடராஜன் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய T20 அணியில் முதன்முறையாக இடம் பிடித்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்நிலையில் நேற்று பயிற்சியை ஆரம்பித்தனர். இன்று அவர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது டி நடராஜன் முதன்முறையாக நம் இந்திய அணி வீரர்களுக்கு அங்கு பந்து வீசி தன் முதல் பந்துவீச்சை இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆரம்பித்துள்ளார்.
1 comment
Great blog here! Also your site loads up fast! What web host are you using?
Can I get your affiliate link to your host? I wish my website loaded up as fast as yours
lol