கொரோனா வைரசிற்கு எதிராக அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்து 94.5 சதவிகிதம் தடுப்பு ஆற்றல் பெற்று இருப்பதாக முடிவுகள் வெளியாகி உள்ளது. மூன்று கட்ட மனித பிரிசோதனைக்கு பின்பு இந்த முடிவுகள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் நேரடி உதவியுடன் மாடர்னா நிறுவனம் உருவாக்கி இருக்கும் இந்த தடுப்பு மருந்து பெரிய அளவில் அரசுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை அளித்துள்ளது. இந்த குறிப்பிட்ட தடுப்பு மருந்து மற்ற மருந்துகளை விட கொஞ்சம் வேறுபட்டது என்று அமெரிக்க அரசு கூறியுள்ளது.
மேலும் உலகம் முழுக்க பல்வேறு நிறுவனங்களில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி அதி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மூன்று கட்ட மனித பரிசோதனைகளை முடித்து இருக்கும் மாடர்னா நிறுவனம் இதற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது இதில் நல்ல முடிவுகள் வந்துள்ளது என்றும் கூறியுள்ளது.
1 comment
Hello, for all time i used to check blog posts here in the early
hours in the daylight, as i like to learn more and more.