
இலங்கை கொழும்புவிலுள்ள சில பகுதிகள் நாளை திங்கட்கிழமை முதல் தொடர்ந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருக்கும் எனறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, புறக்கோட்டை, மருதானை, டாம் வீதி,பெற்றா மற்றும் கம்பனித்தெரு ஆகிய பிரதேசங்கள் வரும் நாளை திங்கட்கிழமை முதல் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முடக்கப்பட்ட பிரதேசங்களில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதையும் இராணுவத்தளபதி அதில் தெரிவித்துள்ளார். இதனிடையே களனி காவல் நிலையம் திங்கள் முதல் முடக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் கெளனி, ஜா-எல, நீர்கொழும்பு, ராகம, வத்தளை,பேலியகொட, கடவத்தை ஆகிய பகுதிகள் வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி முதல் முடக்க நிலையில் இருந்து நீக்கப்படும் என்றும் இராணுவ தளபதி கூறியுள்ளார்.