
பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி 125 இடங்களைக் கைப்பற்றி, பீகாரில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றது. இதையடுத்து பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணியின் புதிய எம்.எல்.ஏ – க்களின் கூட்டம் நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வை விட 31 எம்.எல்.ஏ. – க்கள் குறைவாக பெற்றிருந்தாலும், ஏற்கனவே அக்கட்சியின் தலைமை அளித்த வாக்குறுதியின்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார், மீண்டும் பீகார் முதல்வராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை காலை 11 மணிக்கு நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
+1
+1
+1
+1
+1
+1
+1