
நான் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சிறையின் குளியல் அறைக்குள், ‘கேமரா’ பொருத்தப்பட்டு, மிகவும் தரக்குறைவான செயலில் சிறைத் துறையினர் ஈடுபட்டனர், என்று, பாக்கிஸ்தான்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் மரியம், பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, லாகூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அதே ஆண்டு, நவமபர் மாதத்தில், பிணயத்தில் அவர் வெளியே வந்தார். அந்த மூன்று மாத காலத்தில், சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகள் குறித்து, சில தகவல்களை தற்போது அவ்ர் வெளியிட்டு வருகிறார்.

மேலும் மரியம் நவாஸ், நேற்று முன்தினம் பாகிஸ்தான் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:சிறைக்கு இரண்டு முறை சென்றுள்ளேன். சிறையில், என்னை ஒரு பெண் என்றுகூட பார்க்காமல், சிறைத் துறையினர் மிகவும் மோசமாக தரக்குறைவாக நடத்தினர். அதுகுறித்து இப்போது பேசினால், அதற்கு பொறுப்பான நபர்கள், தங்கள் முகத்தை வெளியில் காட்டவும் தயங்குவார்கள். என்னை அடைத்து வைத்திருந்த சிறைக்குள், கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலும் குளியல் அறையில் கேமரா பொருத்தி வைக்கப்பட்டு, மிகவும் கீழ்த்தரமான, தரைக்குறைவான செயலில் பாகிஸ்தான் பிரதமர் இமரான் ஈடுபட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.

வீட்டின் கதவை உடைத்து, என் தந்தைக்கு முன், அதிகாரிகள் என்னை கைது செய்தனர்.தனிப்பட்ட தாக்குதல்களையும் என்மீது நடத்தினர். இவற்றை வைத்து பார்த்தால், பாகிஸ்தானில், பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பது உறுதியாகிறது. பாக்கிஸ்தான். அல்லது எந்த நாட்டைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் சரி, அவள் பலவீனமானவள் அல்ல. அதை அனைவரும் உணர வேண்டும்.அரசியலமைப்பிற்கு உட்பட்டு, ராணுவத்துடன் பேச்சு நடத்த, எங்கள் பாக்கிஸ்தான், முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சி தயாராக உள்ளது. ஆளும் பாக்கிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி, ஆட்சியில் இருந்து அகற்றப்படவேண்டும் என்று அவர் அந்த சந்திப்பில் கூறியுள்ளார்.