இந்த அண்டங்கள் அனைத்தையும் அடக்கி ஆளும் சிவபெருமானுக்கே குடும்பச்சண்டை வரும்போது, இந்த எஸ்.ஏ.சி குடும்பத்துக்குள்ளும் பிரச்சனை வராதா என்ன? அப்பனுக்கே புத்தி சொன்ன முருகனாக விஜய்-யும், தன் பிள்ளையை கவலைக்குள்ளாக்கும் அப்பாவாக எஸ்.ஏ.சி யும் இருப்பதுதான் காலக் கொடுமை. (முருகனும் விஜய்-யும் ஒன்றா என்று கொடி பிடிக்கும் இரசிக பெருமக்கள் நிதானம் நிதானம். இது சும்மா ஒரு பேச்சுக்காக மட்டும்தான்)
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் லட்சக்கணக்கான நடிகர் விஜய் ரசிக தொண்டர்களை உள்ளடக்கியது. அல்வாவை மொத்தமாக தூக்கிக் கொடுக்க முன் வந்த எஸ்.ஏ.சி எவரிடம் இரகசிய கூட்டணி போட்டாரோ என்னவோ தெரியாது. வரும் தேர்தலை குறி வைத்து அவர் போட்ட மெகா கணக்குகள் எல்லாமே சுக்கு நூறாக தற்போது உடைந்து விட்டது. மகன் நடிகர் விஜய் தனக்கு எதிராகவே கம்பு சுற்றுவார் என்று கனவிலும் நினைத்துப் பார்க்காத தந்தை எஸ்.ஏ.சி, விஜய்-யின் வருங்கால கணக்குகளை ஒரு குழப்பு குழப்பி கும்மியடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
தற்போது அவர் ஊடகங்களுக்கு கொடுத்து வரும் பேட்டிகள் அத்தனையும் ஒரு நெர்தியான குறிக்கோளை கொண்டுள்ளது. தன் மகன் விஜய்யை அணைப்பது போல அணைத்து அவ்ரது எலும்பை நொறுக்கிக் கொண்டிருக்கிறார் தந்தை எஸ்.ஏ.சி. அப்பாவின் அடம்பிடிப்பையும், அரக்க குணத்தையும் நன்கு புரிந்துகொண்டிருக்கும் நடிகர் விஜய், அவரை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருவது தனி கதை.
இந்நிலையில்தான் நடிகர் விஜய்-யின் மக்கள் இயக்கம் அனைத்தும் எஸ்.ஏ.சி யின் கைக்குள் போகக் கூடிய அபாயத்தையும் மக்கள் புட்டு புட்டு வைக்கிறார்கள். கிராமங்கள் வரைக்கும் ஊடுருவி இருக்கும் இந்த இயக்கத்தின் நிறுவனர் நடிகர் விஜய்-யின் அப்பா எஸ்.ஏ.சிதான். இவரை அந்த கட்சியிலிருந்து நீக்கி வைப்பது, ஒரு வழியாக கூட்டை உடைத்துவிட்டு காக்க அதில் முட்டை விட நினைப்பது மாதிரியான ஒரு பெரும் ஆபத்து. அவ்வாறு இருக்க, தன் முயற்சியால் சேர்த்த இவ்வளவு ஒரு பெரிய இயக்கத்தை மிக சாதுர்யமாக தன் தந்தையிடமிருந்து மீட்டெடுப்பதுதான் மிக சரியானது என்று நினைத்து கொண்டு இருக்கிறார்களாம் நடிகர் விஜய் தரப்பு ஆதரவாளர்கள். ஆனால் அதை விட்டுத்தரும் மூடிவில் இல்லை தந்தை எஸ்.ஏ.சி.
வரும்காலங்களில் தந்தை எஸ்.ஏ.சி – யின் வழி நடத்துதல் இல்லாமல் நடிகர் விஜய்-யால் இந்த பெரும் இயக்கத்தை கையில் எடுக்கவும் முடியாது என்கிறார்கள். ஆனால் நடிகர் விஜய்-யை இருதய பூர்வமாக நேசிக்கும் சில ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள், இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. தமிழகத்தில் அரசியலில் உச்ச பதவியில் இருந்த பலபேர் தகுதியற்றவர்களாக்கப்பட்டு வெளியேற்ற பட்டிருக்கிறார்கள். “இது எல்லாம் அரசியலில் சாதாரணமப்பா”, என்கிறாராகள் தந்தை எஸ்.ஏ.சி – யின் இந்த போக்கை உன்னிப்பாக கவனிப்பவர்கள்.
இதற்கிடையில் அவசரப்பட்டு வாய் விட்டுவிடக் கூடாது. தேங்காயும் தனித்தனியாக பிரிக்க முடிந்தாலும், ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை. பொறுத்திருந்து கருத்துரைப்போம் என்று காத்திருக்கிற விஜய் இரசிக பட்டாளங்கள், தங்கள் தலைவன் நடிகர் விஜய்-யின் ஆணைப்படி செயல்பட காத்துக்கொண்டிருக்கிறார்கள் இத்தனை காலம். இந்நேரத்தில்தான் திடீர் திருப்பம்.
நடிகர் விஜய்-யின் தந்தை எஸ்.ஏ.சி க்கு எதிராக அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்திலேயே சில தீர்மானங்களை போடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். நடிகர் விஜய் பச்சைக் கொடி காட்டாமல் இப்படியெல்லாம் நடக்காது ஏன் எனில் ஆங்காங்கே தந்தை எஸ்.ஏ.சி க்கு எதிராக கோஷங்களை எழுப்பி அதை விஜய்-யின் காதுக்கு கொண்டு செல்லும் வேலைகளில் கடந்த சில தினங்களாக இறங்கிவிட்டார்கள் நடிகர் விஜய்-யின் ஆதரவாளர்கள். ஆனால் இவர்களின் ஒரே கவலை என்னவெனில் தன் தொண்டையில் படாமல் தண்ணீர் குடிப்பது எப்படி என்று மட்டும்தன். எது எப்படியோ நடிகர் விஜய்-யின் தந்தை அரசியல் அவதாரம் எடுத்து விட்டார் என்பது மட்டும் உறுதி.