
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், என்னை இந்த மிக சிறந்த அமெரிக்க நாட்டுக்கு ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததற்காக பெருமைப்படுவதாக புதிய மக்களாட்சி அதிபர் ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக தன்னை தேர்வு செய்த என் அமெர்க்கா நாட்டு மக்களுக்கு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தன் நன்றியை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது நமக்கு முன்னால் உள்ள பணிகள் மிக கடினமாக இருக்கும். ஆனால் இதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நீங்கள் எனக்கு வாக்களித்தாலும் வாக்களித்திருக்காவிட்டாலும் நான் எல்லா அமெரிக்கர்களுக்குமான ஒரு அதிபராக நிச்சயமாக இருப்பேன் .

நீங்கள் என் மீது வைத்திருக்கும் அதிநம்பிக்கைக்கு பாத்திரமாக நான் இருப்பேன் என்று கூறியுள்ளார். இதேவேளை அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் மூன்றாவது முயற்சியாக முதலிடத்துக்கு தகுதி பெற்றிருக்கிறார் ஜோ பைடன். ஆனால், அதற்கு அவர் கொடுத்த விலைகள் ஒன்றிரண்டு தசாப்தங்கள் அல்ல. 1987ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2008ஆம் ஆண்டில் இரண்டாவது முறையும் அதிபராகும் போட்டியில் இருந்த அவரால், தனது 77ஆவது வயதில்தான் இந்த அதிபர் பதவிக்கான போட்டியில் முதலிடத்துக்கு முன்னேறிவர முடிந்திருக்கிறது.