தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த வரிசையில் தேசிய கட்சியாகிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இன்று முதல் டிசம்பர் 6 வரை வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திருத்தனி தொடங்கி திருச்செந்தூர் வரை முருகனின் அறுபடை வீடுகளிலும் நடைபெறும் இந்த யாத்திரையில் பல இடங்களில் பாஜகவின் தேசிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் அறிவித்தன.
இந்த வேல் யாத்திரைக்கு தமிழக உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்ட நிலையில் அரசின் முடிவிற்கே விட்டுவிட்டது நீதிமன்றம். ஆனால் தமிழக அரசு பாஜகவிற்கு வேல் யாத்திரைக்கு செல்ல அனுமதி இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தும் தடையை மீறி வேல் யாத்திரை நடைபெறும் என்று தேசிய கட்சியான பாஜக அறிவித்திருந்தது. அதன்படியே வேல் யாத்திரை தொடங்கியுள்ளது.
இந்த யாத்திரைக்கு பாஜக சார்பில் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி தனது அதிகாரப்பூர்வ தமிழக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தமிழக அரசையும், நீதி மன்றத்தையும் எதிர்த்து இந்த யாத்திரை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.