
மொபைல் ஸ்மார்ட் போன் சந்தையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தால் இந்திய மொபைல் பிராண்டுகள் பெரும் பின்னடவை சந்தித்த நிலையில், தற்போது மைக்ரோமேக்ஸ் நிறுவனம் “திரும்ப வந்துட்டேனு சொல்லுடா” என சொல்லுவது போல, புதிதாக இரண்டு மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளது.

மைக்ரோமேக்ஸின் புதிய அறிமுகங்களில் ஒன்றான இன் 1 பி (Micromax In 1b ), குறைந்த விலை பிரிவில், இரட்டை பின்பக்க கேமராக்கள், ரிவர்ஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்ட அம்சங்களுடன் கவர்ந்திழுக்கிறது. 2 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் மாதிரி ரூ.6,999 எனும் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மைக்ரோமேக்ஸ் புதிய அறிமுக விலை உள்ளிட்ட அம்சங்களால் ஈர்ப்புடையதாக விளங்கும் நிலையில், இதே பிரிவில் உள்ள ரெட்மி ( Redmi 9), போகோ சி3 (Poco C3), ரியல்மி சி15 (Realme C15) போன்ற மற்ற முன்னணி போன் மாடல்களுடன் இந்த போனை ஒப்பிட்டு பார்க்கலாம். இவை அனைத்துமே ரூ.10,000-க்கும் குறைவான மொபைல் மாடல்கள்.

மைக்ரோமேக்ஸ் இன் 1பி, 2GB ரேம்+ 32GB ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்களுடன் ரூ.6,999-க்கு கிடைக்கிறது. 4GB ரேம் + 6 4GB ஸ்டோரேஜ் வசதி தேவை எனில் ரூ.7,999 விலை ஆகிறது. நீலம், பச்சை மற்றும் ஊதா என மூன்று வண்ணங்களில் வருகிறது. இது நவம்பர் 26-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ஜியோமியின் பிரபலமான ரெட்மி9 (Redmi 9) ரூ.8,999 விலை கொண்டது. இதன் அம்சங்கள்: 4GB ரேம் + 6 4GB ஸ்டோரேஜ். 128 ஜிபி ஸ்டோரோஜ் மாதிரியின் விலை ரூ.9,999. கார்பன் பிளாக், ஸ்கை புளூ மற்றும் ஸ்போர்டி ஆர்ஞ்சம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. ஆன்லைன் மற்றும் ஷோரூம்களிலும் வாங்கலாம்.

போகோ சி3 (Poco C) , 3GB ரேம் + 32GB ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்களுடன் ரூ,7,499 விலையில் கிடைக்கிறது. 4GB ரேம்+6 4GB ஸ்டோரேஜ், மாதிரி எனில் விலை ரூ.8,999. வண்ணங்கள்: ஆர்டிக் நீலம், எலுமிச்சை பச்சை மற்றும் மேட்டே பிளாக். பலவித சேனல்களில் வாங்கலாம். ரியல்மிசி15 ( Realme C15), 3GB ரேம்+32GB ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்களுடன் ரூ,9,999 விலையில் கிடைக்கிறது. கூடுதல் ஜிபி திறன் மாதிரி ரூ.10,999. பவர் புளூ, பவர் சில்வர் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. ஆன்லைன், ஆப்லைனில் வாங்கலாம். இந்த நான்கு மாடல்களுமே இரட்டை சிம் (நேனோ) வசதி கொண்டவை மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படுபவை. மைக்ரோமேக்ஸ் முழுமையான அனுபவத்தை அளிப்பதாக சொல்கிறது. டிஸ்பிளே திறனை பொறுத்தவரை, மைக்ரோமேக்ஸ் இன் 1பி மாடல், 6.52-inch HD+ (720×1,600 பிக்சல்) டிஸ்பிளே கொண்டுள்ளது. ரெட்மி 9 மற்றும் போகோ சி 3 மாடல்களின் 6.53-inch HD + டிஸ்பிளேவை விட இது சற்று குறைவானது. ரியல்மி சி15 6.5-inch HD + டிஸ்பிளே கொண்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் மற்றும் ரெட்மி இரண்டு போன்களுமே இரட்டை பின்பக்க கேமராக்கள் கொண்டுள்ளன. போகோ மாடல் மூன்று பின்பக்க கேமராக்கள் கொண்டுள்ளது. ரியல்மிசி15 இன்னும் ஒரு படி மேலாக, நான்கு பின்பக்க காமிராக்கள் கொண்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் இன் 1பி, 8- மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது. இது ரெட்மி 9, போகோ சி3 மாடல்களை விட மேம்பட்டது. ரியல்மிசி15 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது. ஸ்டோரேஜ் அம்சத்தில் மைக்ரோமேக்ஸ் 32 மற்றும் 64 ஜிபி வசதி அளிக்கிறது. 128 ஜிபி வரை விரிவாக்கம் செய்துகொள்ளலாம். போகோ சி3 எனில் 512 ஜிபி வரை விரிவாக்கிக் கொள்ளலாம். ரியல்மிசி15 மாடலில் 256 ஜிபி வரை விரிவாக்கி கொள்ளலாம். ரெட்மி9 மாடல், 64 மற்றும் 128 ஜிபி வசதியுடன் 512 ஜிபி விரிவாக்க வசதி அளிக்கிறது. மைக்ரோமேக்ஸ் இன் 1பி, 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS / A-GPS, USB Type-C, 3.5mm ஹெட்போன் வசதி கொண்டுள்ளது. மற்ற மாடல்களும் இதே வசதி கொண்டுள்ளன. மேலும், பின்பக்க கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளன. போகோ 3-ல் மட்டும் இது கிடையாது. இனி பேட்டரி அம்சத்தை பார்க்கலாம். மைக்ரோமேக்ஸ், ரெட்மி மற்றும் போகோ போல 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது. பத்து மடங்கு வேகமான சார்ஜிங் அளிக்கின்றன. ரியல்மீட் சி15, 6,000mAh பேட்டரி மற்றும் 18 மடங்கு வேகமான சார்ஜிங் அளிக்கிறது. இந்த போன்களில் மைக்ரோமேக்ஸ் மாடல்தான் 188 கிராமில் மிகவும் லேசானது. ரெட்மி மற்றும் போகோ 194 கிராம் என்றால், ரியல்மி மாடல் 209 கிராமில் கனமானது.
1 comment
Heya i’m for the first time here. I came across this board and I to find It really
useful & it helped me out a lot. I am hoping to offer one thing back
and aid others such as you aided me.