இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் வழக்குகளை விசாரிக்க, இந்திய நாட்டில் உள்ள எந்த மாநிலங்களுக்கும் சென்று விசாரணை மேற்கொள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு பொது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முன் அனுமதி பெறாமலே விசாரணைக்காக எந்த மாநிலங்களுக்குள்ளும் செல்லலாம்.
ஆனால் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களான, ராஜஸ்தான், சத்தீஷ்கர், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் சிபிஐக்கு வழங்கியிருந்த பொது ஒப்புதலை திரும்ப பெற்றுள்ளன. இந்த நிலையில், சிபிஐக்கு வழங்கப்பட்டு இருந்த பொது ஒப்புதலை ரத்து செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரள அரசு அமைச்சரவையின் இந்த முடிவால் கேரள மாநில அரசின் ஒப்புதல் இன்றி சிபிஐ இனி எந்த வழக்குகளையும் விசாரிக்க முடியாது. எந்த விசாரணைகளுக்கும் மாநில அரசின் அனுமதி பெற்றே சிபிஐ இனி நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.