
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தையொட்டி குஜராத்தின் கெவாடியா நகரில் உள்ள அவரது பிரமாண்ட சிலைக்கு மரியாதை செலுத்திய பாரத பிரதமர் மோடி, ஒற்றுமை தின பேரணியை தொடங்கிவைத்தார். அதன் பின்பு அங்கு நடைபெற்ற அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளை பிரதமர் மோடி கண்டு மகிழ்ந்தார்.

அதன்பிறகு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினர். இந்தியாவின் புல்வாமா தாக்குதலின்போது பாதுகாப்புப்படையினர் செய்த தியாகத்தை பற்றி வருத்தப்படாமல் சிலர் அரசியல் செய்ததாகவும், பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் யாரும் பயனடைய முடியாது என்றும் பிரதமர் மோடி அதில் கூறினார். புல்வாமா தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் அரசாங்கம் ஒப்புக்கொண்டதாகவும், தேச நலன் சார்ந்த விஷயங்களில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.