கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பொது மக்களை மட்டுமின்றி மருத்துவர்கள், முதன்மை பணியாளர்கள் அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரையும் பாரபட்சமின்றி போட்டு தாக்கி வருகிறது.
ஏற்கனவே இந்த வைரஸ் தொற்றுக்கு மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் பாதிக்கப்பட்டு வந்துள்ள இந்த நிலையில் அந்த வரிசையில் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸும் சேர்ந்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அறிகுறிகள் இல்லை, நல்ல உடல்நிலையுடன் இருக்கிறேன். சமீபகாலமாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள், மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். வீட்டிலிருந்தபடியே வேலைகளை இனி கவனிக்கவுள்ளேன் என அதில் பதிவிட்டுள்ளார்.
1 comment
I know this if off topic but I’m looking into starting my own weblog and was curious what all is needed to get setup? I’m assuming having a blog like yours would cost a pretty penny? I’m not very internet smart so I’m not 100 certain. Any tips or advice would be greatly appreciated. Thanks