பூமியில் இருந்து சுமார் 330 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறுங்கோளான பென்னுவை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, “ஓசிரிஸ்-ரெக்ஸ்” எனப்படும் செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியது. 2016 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த செயற்கைக் கோள், 2018 ஆம் ஆண்டு பென்னு குறுங்கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக உள் நுழைந்து சீரான வேகத்தில் பயணம் மேற்கொண்டது.

அதன்பின்னர் படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை மெதுவாக குறைக்கப்பட்டு பென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பென்னு குறுங்கோளில் இருந்து பாறைத் துகள்களை ஆய்வுக்காக பூமிக்கு எடுத்துவர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஓசிரிஸ் ரெக்ஸ் செயற்கைக் கோளில் உள்ள இயந்திரக் கைகள் குறுங்கோளில் துளையிட்டு பாறைத் துகள்களை எடுக்கத் தொடங்கியது. இதேபோல் அதன் தூசித் துகள்களையும் சேகரிக்கிறது.

சுமார் 4 ஆண்டு பயணத்திற்கு பிறகு ஓசிரிஸ்-ரெக்ஸ் வெற்றிகரமாக பென்னுவில் தரையிறங்கியதும் விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். பென்னுவில் தரையிறங்கும் நிகழ்வு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை விட சுமார் 18.5 நிமிடங்கள் முன்னதாகவே நிகழ்ந்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். திட்டமிடப்பட்ட அளவு துகள்களை விண்கலம் சேகரித்துள்ளதா? என்பது விரைவில் தெரியவரும் என்றும் அவர்கள் கூறினர்.

பென்னுவில் இருந்து குறைந்தபட்சம் 60 கிராம் அளவிற்கு பாறைத் துகள்களை ஆய்வுக்கு எடுத்து வர நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் விண்கலம் 2 கிலோ கிராம் வரை பாறைத் துகள்களை எடுக்கும் திறன் கொண்டது என்பதால் கூடுதல் அளவு மாதிரிகள் வர வாய்ப்பு உள்ளது. பென்னு குறுங்கோளில் தனது பணிகளை முடித்துக்கொண்டு ஓசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அங்கிருந்து புறப்பட்டு, 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் தேதி பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் சார்பில் விண்ணில் ஏவப்பட்ட ஹயாபுசா-2 விண்கலம், மற்றொரு குறுங்கோளான லியுகுவில் இருந்து சென்ற ஆண்டு பாறைத் துகள்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது. அந்த விண்கலம் தற்போது பூமியை நோக்கி பாய்ந்து வந்து கொணடிருக்கிறது.
2 comments
Great site! I am loving it!! Will be back later to read some more. I am bookmarking your feeds also.
Aw, this was a really nice post. In thought I want to put in writing like this moreover – taking time and actual effort to make a very good article… however what can I say… I procrastinate alot and on no account appear to get one thing done.