12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகள் தமிழ்நாட்டின் பெரம்பலூர் அருகே கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது என கூறப்பட்டு வருகிறது. பெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் அதிகமான முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பெரம்பலூர் மாவட்டம் அருகே குன்னம் பெரிய ஏரியில் நேற்று மண் எடுத்து கொண்டிருந்தபோது, அம்மோனைட் எனப்படும், கடல்வாழ் நத்தைகளின் படிமங்களும் சிதைவுற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஏரியில் டைனோசர் முட்டை போல் பெரிய உருண்டை வடிவிலான படிமங்களும் கிடைத்துள்ளன.
அதனை புவியியல் ஆய்வாளர்கள் வந்து பார்வையிட்டு, அது டைனோசர் முட்டையா என்ன?, இல்லை என்றால் அவை என்ன? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் அவர்களிடம். அந்த கடல்வாழ் நத்தைகளின் படிமங்களையும், உருண்டை வடிவிலான படிமங்களையும் வருவாய்த்துறையினர் கைப்பற்றி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
மேலும் குன்னம் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்படிமங்களை அதே இடத்தில் பாதுகாத்தும், சிலவற்றை அதன் அருகிலுள்ள அரசு பள்ளிகளிலும் சேகரித்து வைத்தும், உள்ளூர் அளவிலான காட்சியகங்கள் ஏற்படுத்தி பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல்படிமங்கள் கிடைக்கப்பட்டுள்ள பகுதிகளை தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று சமுக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த டைனோசர் முட்டைகள் மாமிச கார்னோட்டாரஸ் (Carnotaurus) மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ சவுரபோட் டைனோசரின் முட்டைகளாக இருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. டைனோசர் முட்டைகளாக இருந்தால் இது சுமார் 12 கோடி முதல் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் எனவும் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தனித்துவமான கார்னோட்டாரஸ் டைனோசர்கள் தென் அமெரிக்க கண்டத்தில் சுற்றித் திரிந்தவை, மேலும் சில அசாதாரண உடல் குணங்கள் இருந்தபோதிலும், அவை மிகவும் ஆதிக்கம் செலுத்தும் வேட்டையாடுபவைகளாக இருந்துள்ளன. கார்னோட்டரஸ், வேகம் மற்றும் சுறுசுறுப்பான விலங்கின வகை என்றும், 1.5 டன் வரை எடையும், சுமார் 30 அடி நீளமும் கொண்டவை என்றும். பெரிய கால் தசைகள் கொண்ட,மிகவும் திறமையான வேட்டையாடும் ஒரு வகை இனம் எனவும் தொல்லியல் ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.
8 comments
Hey very nice web site!! Man .. Excellent .. Amazing .. I will bookmark your blog and take the feeds also…I am happy to find numerous useful info here in the post, we need develop more strategies in this regard, thanks for sharing. . . . . .
I was recommended this blog by my cousin. I am not sure whether this post is written by him as nobody else know such detailed about my problem. You’re incredible! Thanks!
Usually I don’t learn post on blogs, but I wish to say that this write-up very pressured me to check out and do so! Your writing style has been amazed me. Thank you, very nice article.
It’s laborious to search out educated people on this matter, but you sound like you know what you’re speaking about! Thanks
hello!,I like your writing very much! share we communicate more about your article on AOL? I require an expert on this area to solve my problem. Maybe that’s you! Looking forward to see you.
Sweet blog! I found it while browsing on Yahoo News. Do you have any tips on how to get listed in Yahoo News? I’ve been trying for a while but I never seem to get there! Many thanks
I rattling pleased to find this internet site on bing, just what I was looking for : D also bookmarked.
I went over this website and I believe you have a lot of wonderful information, bookmarked (:.