மனிதன் முதற்கொண்டு அனைத்து உலக உயிர்களும் படிபடியாக முதலில் தோன்றிய உயிர்களிலிருந்து பரிணமாவளர்ச்சி அடைந்தன எனபதை வெளியிட்டவர். விலங்கின உயிர்களின் வளர்ச்சியை பல அறிவியல் உண்மைகளுடன் முதல் முதலில் இந்த உலகுக்கு நிரூபித்து காட்டியவர். அவர்தான் சார்லஸ் டார்வின்.
சார்லஸ் டார்வின் 1809 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் ஷிரூஸ்பரி என்ற ஊரில் பிறந்தவர். இவருக்கு கல்வி கற்பதில் அவ்வளவாக ஈடுபடு இல்லை. ஆனால் உலக இயற்கையை அழவுகடந்து நேசித்தார். தாவரங்கள், பூச்சிகள் போன்ற உயிரியல் உயிர்களை சேகரித்து அவைகளுடன் தன் பொழுதை போக்கினார். ஆனால் அவரது ஆசிரியர்கள் அவரை மக்கு என்றும் கையாலாகாத உதவாக்கரை என்றும் எண்ணியிருந்தனர்.
ஆனால் டார்வினோ பள்ளி படிப்பை படித்து முடித்து மருத்துவ படிப்பு படிக்க சென்றார். அந்த காலத்தில் உடல் அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து எதுவும் இல்லை, அப்போது அது கண்டுபிடிக்க படவில்லை, ஆனால் டார்வின் அங்கு இரண்டு அறுவை சிச்சைகளை தன் கண்ணால் நெரடியாக பார்த்தார், அங்கு அவர்களின் அலறல் துடிப்பை பார்த்து மனவேதனை அடைந்து மருத்துவ படிப்பை பாதிலேயே நிறுத்தி விட்டார். அதன் பிறகு வேறு கல்லூரிக்கு சென்று, பி.ஏ பட்டப் படிப்பை படித்து முடித்தார்.
1831 ஆம் ஆண்டு பீகிள் என்ற கப்பல் பல உலக நாடுகளை சுற்றி அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள புறப்பட்டது. அதில் சார்லஸ் டார்வின் ஒரு உலக இயற்கை அறிவியல் விஞ்ஞானியாக புறப்பட்டு சென்றார். அந்த கப்பல் பயணம் தான் சார்லஸின் வாழ்கையில் மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்கியது. அதுமட்டும் இல்லை இந்த உலகத்திற்கு புதிய அறிவியல் தத்துவங்களையும் பல புதிய அறிவியல் உண்மைகளையும் கண்டுபிடிக்க உதவியது.
அந்த கப்பல் 5 ஆண்டுகள் கடலில் பயணித்து திரும்பியது. 1936 ஆம் ஆண்டு சார்லஸ் டார்வின் தன் சொந்த நாடான இங்கிலாந்து வந்தடைந்தார். தன்னோடு எடுத்து வந்த உயிரியல் விலங்குகளை பூமியின் வடிவமைப்பு அடிப்படையில் வகைபடுத்தினார். இது பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் காணப்பட்டது. பல நாடுகளில் அவர் கண்ட தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்து அவர் பார்த்தபோது உலக உயிர்கள் பரிணாம மாற்றத்திற்கு உட்பட்டவை எனபதை அவர் உறுதிப்படுத்திக் கொண்டார்.
காற்று, மழை, குழிர், வெப்பம், உணவு தட்டுப்பாடு மற்றும் இயற்கை சூழ்நிலை மாற்றம் ஆகிய காரணங்கள் உலக உயிரினங்களில் பரிணாம மாற்றத்தை ஏற்படுத்துகிறது, இயற்கை சூழ்நிலை, மாற்றம் அடையும்போது அதற்கு ஏற்றாற்போல் உயிரினங்கள் தன்னை மாற்றிக்கொண்டு வாழ்ந்தால் அவைகள் உயிருடன் இருக்கும். அப்படி இல்லை என்றால் அவைகள் மடிந்து போய்விடும். இதில் எந்த உயிரினங்கள் சூழ்நிலைக்கு தக்கபடி தன்னை மாற்றி கொள்கிறதோ அந்த உயிரினங்களை “இயற்கையின் தேர்வு” என்று சார்லஸ் எடுத்துரைத்தார்.
மீண்டும் பல கப்பல் பயணங்கள் மேற்கொண்டு 20 ஆண்டுகள் கழித்து, தான் சேகரித்து வைத்து இருந்த அறிவியல் ஆதார உண்மைகளை கொண்டு “இனங்களின் தோற்றம்” என்ற புத்தக நூலை வெளியிட்டார். அது பெரும்பாலான மக்களால் விரும்பப்பட்டது, அதனால் அந்த புத்தகம் உடனே விற்று முடிந்தது. அதே சமயத்தில் அவ்ருக்கு பல எதிர்ப்புகளும் ஏற்பட்டது.
உலக உயிர்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் படைக்கப்பட்டவை. அவைகள் யாவையும் மாறாமல் அப்படியே இருக்கின்றன, என்ற அந்த கருத்தே 18-ஆம் நூற்றாண்டு காலகட்டம்வரை எண்ணப்பட்டு வந்தது. சார்லஸால் எடுத்துரைக்கப்பட்ட இந்த கொள்கை அந்த கால மதவாதிகளிடையே இருந்து பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. அவரது புத்தக நூலை தீயில் போட்டு எரித்து தங்கள் எதிர்புகளை தெரிவித்தனர்.
ஆனால் மனம் தளராத சார்லஸ் டார்வின் 1871 ஆம் ஆண்டு “மனிதனுடைய பரம்பரியம்” என்ற புத்தக நூலை வெளியிட்டார். மனிதன் வால்களில்லா குரங்கில் இருந்துதான் தோன்றினான் என்ற அவருடைய அறிவியல் ஆய்வுபூர்வமான கருத்தை அந்த நூலில் விளக்கி இருந்தார். மீண்டும் அவருக்கு எதிர்புகள், மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று சொல்கிறார் என்று உலகம் முழுவதுதிலும் இருந்து அவருக்கு எதிராக எதிர்புகள் வந்தன.
மனிதன் ஒரு கடவுள் பிறவி என்றும், மனிதனுக்கு மற்ற உலக உயிர்களுடன் எந்த தொடர்பும் கிடையது என்று அக்கால மக்கள் எண்ணி வந்தனர். ஆனால் டார்வின் மனிதன் எப்படி இந்த உலகில் உருவாகி இருக்கலாம் என்ற உண்மையை அறிவியல் ஆய்வுகள் மூலம் கண்டறிந்து கூறினார். மனிதனும் இந்த உலகில் வாழும் விலங்குகளின் வரிசையில் ஒரு அங்கம்தான் என்பதை விளக்கி கூறியுள்ளார். இந்த உலக்த்தில் உள்ள பல கோடி உயிர் இனங்களில் மனித இனமும் ஒன்று என்றார் உலக உயிரினங்களில் மனிதனுக்கு என்று ஒரு தனி இடம் இல்லை என்பதை தன்னுடைய புத்த நூலில் குறிப்பிட்டுள்ளார் அவர்.
அப்படிபட்ட அறிவியல் மேதை 1882 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி காலமானார். அறிவியல் விஞ்ஞான உலகில் இவர் ஆற்றிய பணிக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இந்த மேதைக்கு பட்டம் வழங்கியது. சார்லஸின் அறிவியல் ஆராய்சி கொள்கைக்கு பலத்த எதிர்ப்பும், விவாதங்கழும் இருந்தாலும், இவருடைய கொள்கையை அவர் இறப்பதற்கு முன்பே பல அறிவியல் விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டனர். இன்றும் உலகில் மனிதன் ஏதிலிருந்து தோன்றினான் என்ற மிகப்பெரும் விவாதத்தை ஏற்படுத்தி கொண்டிருப்பது டார்வின் வகுத்த அந்த கொள்கையே ஆகும்.
உங்கள் கவனத்திற்கு: இந்தக் கட்டுரையை நீங்கள் உங்கள் தளங்களில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பகிரலாம், நீங்கள் பகிரும் போது இந்த இணையதளத்தின் இணைப்பை கண்டிப்பாக அந்தப் பக்கத்தில் இணைக்க வேண்டும், இந்த கட்டுரையை புத்தகங்கள், செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பகிரும் முன் அறிவியல்புரத்திலிருந்து முன் அனுமதி பெறவேண்டும், எங்களை தொடர்புகொள்ள: [email protected]
காப்புரிமை © www.ariviyalpuram.com