இளம் பெண் ஒருவர் திருமண கோலத்தில் தன் அண்ணனின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாது அவரை கட்டி தழுவி அழும் காணொளி ஒன்று வெளியாகி காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.
அண்ணன் தங்கை பாசத்திற்கு நிகர் இந்த உலகில் எதுவும் இல்லை என்றுதான் கூற வேண்டும். என்ன தான் அவர்களுக்குள் அடித்துக்கொண்டாலும் அவர்களுக்குள் எப்போதும் ஒரு பாசம் இருக்கும்.

அதேபோல் அண்ணன் தங்கை பாசத்துக்கு உதாரணமாக முதலில் நினைவுக்கு வருபவர் நம் மறைந்த நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். அவரின் பாசத்தையும் மிஞ்சி விட்டார் காணொளியில் வரும் இந்த இளைஞர்.

திருமணம் என்பது மிகவும் புனிதமான உறவாக அனைத்து இன மத மக்களாலும் கருதப்படுகிறது. அது மாத்திரம் இன்றி பல பெண்களின் வாழ்க்கையில் திருப்பு முனையினையும் ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு அது.
திருமணமான பெண், தன் குடும்பத்தை விட்டு பிரிந்து புதிய ஒரு உறவுடன் இணையும் தருணம். மகிழ்ச்சி, துக்கம் எல்லாமே கலந்த தருணம் என்பது மறுக்க முடியாத உண்மையே!!!