காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி பொறுப்பிலிருந்து நடிகை குஷ்பூ அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்ற சில மாதங்களாகவே நடிகை குஷ்பூவுக்கு காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் மற்றும் எதிர்ப்பு ஏற்பட்டு வந்தது.புதிய கல்விக்கொள்கை குறித்து பாஜகா வுக்கு பாராட்டு தெரிவித்த குஷ்பூவை தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி கொச்சையாக விமர்சித்திருந்தார்.
அத்துடன் அக்கட்சியின் எம்பி வசந்தகுமார் மறைவையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் நடிகை குஷ்பூவை அழைக்கவில்லை.
இருப்பினும் சென்ற வாரம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்த காங்கிரஸ் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பூ கலந்து கொண்டார்.அதில் பாஜகவுக்கு எதிராக அவர் கடுமையான கருத்துக்களை முன்வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.