
கல்வியில் உயர்வு தாழ்வு உடைய முந்தய காலத்தில் ஒரு பெண் படித்து அறிவியல் விஞ்ஞானியாவது என்பது சுலபமான விஷயம் இல்லை.

அது மட்டும் இல்லை, தன் குடும்ப பொறுப்பிலிருந்து வெளிவந்து அறிவியல் கண்டுபிடிப்பு ஆய்வுகளில் செயல்படுவது என்பது மிகவும் கடினமான ஒரு காரியம்தான். ஆம் அதையும் தாண்டி ஒரு பெண்ணும் அறிவியல் விஞ்ஞானி ஆக முடியும் மற்றும் அறிவியலில் சாதனைகளை மேற்கொள்ள முடியும் என்பதை இந்த உலகத்திற்கு நிரூபித்துள்ளார் ஒரு பெண் அறிவியல் விஞ்ஞானி.

அதுமட்டும் இல்லை அந்த காலத்தில் அறிவியல் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசை பெறுவது என்பதும் மிக கடினமானது, ஆனால் அந்த பெண்மணி இரண்டு நோபல் பரிசுகளை தன் வசம் ஆக்கியவர். இது இந்த உலகத்தின் மாபெரும் சாதனை ஒரு பெண் விஞ்ஞானி இரண்டு நோபல் பரிசுகளை பெறுவது என்பது. ஆம் அவர்தான் மேடம் மேரி கியூரி. இந்த பெண்மணிதான் ரேடியோவை அல்ல, ரேடியத்தை கண்டுபிடித்தவர்.

அறிவியல் விஞ்ஞானி மேரி அவர்கள் போலந்து நாட்டிலுள்ள வார்சா என்னும் நகரில் 1867 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தியதி பிறந்தவர். அந்த காலங்களில் பெண்கள் கல்லூரிக்கு செல்வதில் மிக கட்டுபாடுகள் இருந்தது. அதுமட்டுமா அவர் பிறந்த வார்சா பல்கலைக்கழகத்தில் பெண்கள் சேர்ந்து படிப்பது தடை செய்ய பட்ட காலம் அதனால் அவரை அந்த கல்லூரியில் சேர்க்க மருத்துள்ளனர், ஆனால் மனம் தளராத மேரி, பாரிஸ் சென்று அங்குள்ள சர்போன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கு தன் படிப்பை மேற்கொண்டார்.

அவருடை தின சாப்பாடு என்பது ரொட்டியும், தேனீரும் தான், அந்த காலத்தில் அவருடைய சத்தான உணவு என்பது ஒரே ஒரு முட்டை தான். தன் வறுமையை பொருட்படுத்தாமல் தன் படிப்பில் கவனம் தெலுத்தி தன் படிப்பை படித்து முடித்தார். அதன் பிறகு தன் படிப்பை சார்ந்த அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார்.

அப்போது அந்த சமயத்தில் மேரி அவர்கள் பியார் கியூரி என்பவரை சந்தித்தார். அதன் பிறகு அவரை அவ்ருக்கு பிடித்துபோய் இருவரும் 1895 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகே மேரி எனற தன் பெயரை, மேரி கியூரி என்று மாற்றிக் கொண்டார். மேரிகியூரி பிட்ச்பிளெண்ட் எனும் தாதுவைக் கொண்டு ஒரு ஆய்வை மேற்கொண்டு வந்தார். அதிலிருந்து அவர் இரண்டு தனிமங்களை கண்டுபிடித்தார். அந்த தனிமங்களுக்கு பொலோனியம், ரேடியம் என்று பெயரிட்டார். மேலும் சுத்தமான ரேடியத்தை அவர் பெருவதற்கு நான்கு ஆண்டுகள் ஆய்வுகளை மேற்கொண்டு கடுமையாக உழைத்தார்.

1903 ஆம் ஆண்டு மெரிகியூரி மற்றும் பியார் கியூரி ஆகிய தம்பதியினருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த உலகத்திலேயே முதன் முதலில் நோபல் பரிசை பெற்ற ஒரே பெண்மணி மேடம் மேரிகியூரிதான். அந்த சம்யத்தில் ஒரு பெரும் துக்கம் அவரை வந்து சேர்ந்தது. ஆம் 1906 ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தில் அவருடைய கணவர் பியார் கியூரி மரணம் அடைந்தார் என்ற அந்த துக்கமான செய்திதான். அதனால் அவருடைய அறிவியல் ஆய்வு மிகவும் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு தன் மனதை தேற்றி கொண்டு மறுபடியும் தான் மேற்கொண்டு வந்த ரேடியம் கதிர்வீச்சை பற்றிய தனது ஆய்வை மேற்கொண்டு வந்தார்.

மேலும் தனது கணவர் இறந்ததால் ஃபிரெஞ்ச் அரசாங்கத்தில் காலியாக இருந்த விஞ்ஞான பேராசிரியர் பதவியை மேரிகியூரிக்கு அந்த அரசாங்கம் அளித்து அவரை கௌரவித்தது. ஆனால் பல்கலை கழகத்தில் பல எதிர்ப்புகள், ஒரு பெண் விஞ்ஞானி அவதா? விதவைக்கு எவ்வாறு பேராசிரியர் பதவி வழ்ங்குவது என்றெல்லாம் எதிபுகள் கிழம்பியது. ஆனால் ஃபிரெஞ்ச் அரசாங்கம் அதனை பொருட்படுத்தாமல் மேரிகியூரிக்கு துணை நின்றது. இதன் மூலம் பழைய பாகுபாடுகளை தவிடுபொடியாக்கி பாரிஸ் பல்கலைக்கழக்த்தில் முதல் பெண் பேராசிரியராக ஆனார் மேரிகியூரி.

மேலும் ரேடியம் கதிரியக்கம் சார்ந்த தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சிக்காக 1911 ஆம் ஆண்டு வேதியியலில் தன் அறிவியல் சாதனைக்கான இரண்டாவது நோபல் பரிசை பெற்ற ஒரே பெண்மணி இவர்தான் ஆனால் இரண்டு நோபல் பரிசும் இவருக்கு பயன்பட வில்லை, இந்த இரண்டு நோபல் பெற்ற இந்த அறிவியல் விஞ்ஞானியை, பெண் என்ற ஒரே கரணத்திற்காக பாரிஸில் உள்ள புகழ் பெற்ற விஞ்ஞானகழகத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. இதன் மூலம் இவருக்கு இரண்டு நோபலும் பயன்பாடாது போனது. பெண்களுக்கு எதிரான பழைய எண்ணங்கள் இருந்து வந்ததே இதற்கு காரணம்.

ஆனால் இவருடைய கண்டுபிடிப்போ இந்த உலகம் போற்ற படவேண்டியது. ஆம் அப்படிபட்ட மேரிகியூரி மேலும் ஒரு புதிய தனிமத்தை பிரித்தெடுக்கும் அறிவியல் ஆராய்ச்சியை மேற் கொண்டிருந்தார், ரேடியம் கதிர்வீச்சால் அவருடைய உடலை கதிரியக்க சோகை நோய் தாக்கியது. இந்த நோயின் காரணமாக அவர் 1934 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தியதி இந்த உலகத்தை விட்டு மறைந்தார். அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற ரேடியமே அவரின் மரணத்திற்கும் எமனாக அமைந்தது.
உங்கள் கவனத்திற்கு: இந்தக் கட்டுரையை நீங்கள் உங்கள் தளங்களில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பகிரலாம், நீங்கள் பகிரும் போது இந்த இணையதளத்தின் இணைப்பை கண்டிப்பாக அந்தப் பக்கத்தில் இணைக்க வேண்டும், இந்த கட்டுரையை புத்தகங்கள், செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பகிரும் முன் அறிவியல்புரத்திலிருந்து முன் அனுமதி பெறவேண்டும், எங்களை தொடர்புகொள்ள: [email protected]
காப்புரிமை © www.ariviyalpuram.com