எகிப்து அதன் மிகப்பெரிய தொல்பொருள் கண்டுபிடிப்பை சமீபத்திய நினைவகத்தில் அறிவிக்கத் தயாராகி கொண்டிருக்கிறது, 4,400 ஆண்டுகள் பழமையான மரத்தினால் ஆனா மற்றும் தங்கத்தினால் ஆனா பல சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் பல வன விலங்குகளின் மம்மிகளும், பதப்படுத்தப்பட்ட பறவைகளின் மம்மிகளும் பாதுகாப்பாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் சில பிரமிக்கத்தக்க கண்டுபிடிப்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எகிப்திய சுற்றுலா மற்றும் தொல்பொருள் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் உச்சக்கட்ட பழங்கால கவுன்சில் ஒன்று சக்காரா தொல்பொருள் பகுதியில் இதுவரை கண்டிராத மிகப் பெரிய தொல்பொருள் தேக்கத்தைக் கண்டுபிடித்துள்ளது என்று அறிவித்துள்ளது. இந்த தொல்பொருள் தேக்கத்தில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மனித மம்மிகள் மற்றும் எகிப்திய கடவுளின் விசித்திரமான சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சக்காராவின் இந்த கண்டுபிடிப்பில் பல மனித மற்றும் விலங்குகள் புதைக்க பட்ட இடங்கள், பல சாப்தி சிலைகள், ஐசிஸ் கடவுள் சிலைகள், நெப்திஸ் மற்றும் ஹோரஸ் கடவுள்களின் சிலைகள், முகமூடிகள் மற்றும் பிற்பகுதியில் பயன்படுத்தப்பட்ட சங்ககால கனோபிக் பாத்திரங்கள் ஆகியவை இந்த பகுதியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஐம்பது சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எகிப்தின் வலைத்தள தகவல் தெரிவிக்கிறது. முதற்கட்டமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ஐம்பது சவப்பெட்டிகளில் சில சவப்பெட்டிகள் மட்டும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட அகழ்வாராய்ச்சியின் போது இந்த எண்ணிக்கை அப்படியே இரண்டு மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த சவப்பெட்டிகளில் எதுவுமே முக்கியமான வரலாற்று நபர்களைச் சார்ந்தவை என்று கருதப்படவில்லை, சவப்பெட்டிகளில் யார் புதைக்கப்பட்டார்கள் என்பதை அடையாளம் காணும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்த கண்டுபிடிப்புகளை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வரும் காலங்களில் அறிவிக்கப்படும் என்று எகிப்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் பல தொல்பொருள் கண்டுபிடிப்புகளுக்கு சக்காராவின் தொல்பொருள் பகுதி ஒரு சாட்சியாக உள்ளது. இவற்றில் மிக முக்கியமானது டூம்ப் ஆப் வாஹ்டி கல்லறை, இங்கு தான் எதிர்பார்த்திடாத ஏராளமான வன விலங்குகள் மற்றும் பறவைகளின் மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 2018 இல் தொடங்கிய இந்த வன விலங்கு கல்லறையின் ஆராய்ச்சி, 2020 ஏப்ரல் வரை தொடர்ந்துள்ளது என்று எகிப்திய செய்தித்தாளான அல்-வட்டாவின் ஆதாரங்கள் தெரிவிக்கிறது. இந்த ஆண்டின் ஏப்ரல் 18, உலக பாரம்பரிய தினத்தன்று சுமார் 120 x 90 செ.மீ அளவைக் கொண்ட கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிணறு சுமார் 11 மீட்டர் ஆழம் கொண்டது என்பதும் அந்த ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. அதேபோல், 2019 ஆம் ஆண்டின் இறுதியில், இப்பகுதியில் பணிபுரியும் எகிப்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பல வன விலங்குகள் மற்றும் புனித பறவைகளின் மம்மிகளின் தேக்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இவை அனைத்தும் சுமார் 4,400 ஆண்டுகள் பழமையான விலங்குகள் மம்மிகள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த பகுதியில் இதுவரை மனிதர்களை விட அதிகப்படியான எண்ணிக்கையில் வன விலங்குகள் மற்றும் பறவைகளின் மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிங்கம், புலி, பூனை, கழுகு, முதலை, சக்காரா வண்டு போன்ற பல உயிர்களின் பதப்படுத்தப்பட்ட மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முதலை மம்மியை எளிதில் அடையாளம் காணும் வகையில் அதன் உருவம்
பொறிக்கப்பட்ட மரப்பலகையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து மம்மிகள் பெரிய பூனை வகையைச் சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப ஆய்வுகளில் இவை சிறிய வகை சிங்கங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சர்வதேச செய்தி நிறுவனங்கள் இந்த கண்டுபிடிப்பை ஸ்பின்க்ஸ் விலங்குடன் ஒத்துபோவதாக கூறியுள்ளது.