பூமி பந்தின் வரலாற்றில் மிகவும் கொடூரமான மற்றும் ஆபத்தான இந்த பகுதியில்தான், பல பயங்கரமான இராட்சஸ உயிரினங்களுடன் இருந்துள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
புவியியலாளர் நிசார் இப்ராஹிம் தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின் முடிவு, பூமியின் மிகவும் ஆபத்தான இடம் எது என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
மனிதர்கள் பல வருட காலமாகப் பூமியில் வாழ்ந்து வருகின்றனர், ஆனால் இன்னும் பல கேள்விகளுக்கு மனிதர்களால் சரியாகப் பதிலளிக்க இயலாது. ஆழமான கடல் எது? மிக நீளமான கடல் இது என்று கண்டறிந்த மனிதனுக்கு, பூமியின் மிகவும் ஆபத்தான இடம் எது? என்ற கேள்விக்கான பதில் கிடைக்காமலேயே இருந்து வந்துள்ளது. பூமி பந்தின் வரலாற்றில் மிக மோசமான இடத்தை தேடித் திரிந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் மற்றும் விஞ்ஞானி குழுவிற்கு தற்பொழுது இந்த கேள்விக்கான பதில் கிடைத்துள்ளது. போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வின்படி, ஆப்பிரிக்காவில் கிடைத்துள்ள டைனோசர்களின் எலும்பு படிமங்களின் வயது குறிப்பு தகவல்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியில் பல அறிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த புதைபடிமங்களின் ஆய்வு, அந்த பகுதியில் மிக கொடூரமான உயிர் உண்ணும் பிராணிகள், பறக்கும் மற்றும் ஊர்வன விலங்குகள் மற்றும் முதலை போன்ற இராட்சஸ உயிரினங்கள் இருந்ததற்கான தடயங்கள் இருப்பதை உறுதிசெய்துள்ளனர். 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களுடன், இந்த வேட்டையாடும் கொடூரமான பல உயிரினங்கள் உயிர் வாழ்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து புதைபடிவ எலும்புகளும் கண்டறியப்பட்ட பூமியின் மிகக் கொடூரமான இடம் என்று கருதப்படும் இடமாக, தென்கிழக்கு மொராக்கோவில் உள்ள கிரெட்டேசியஸ் பாறை அமைப்புகளின் ஒரு பகுதி கூறப்படுகிறது, இந்த பகுதி கெம் – கெம் குழு என்றும் அழைக்கப்படுகிறது.
டெட்ராய்ட், மொன்டானா, சிகாகோ, லீசெஸ்டர், போர்ட்ஸ்மவுத், காசாபிளாங்கா, மெக்கில் மற்றும் பாரிஸ், இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட புதை படிவ நிறைந்த எஸ்கார்ப்மென்ட்டின் முதல் விரிவான மற்றும் முழுமையாக விளக்கப்பட்ட அறிக்கையை ஜௌர்னெல் ஜூக்கிஸ் என்ற பதிப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்ராஹாமின் கூற்றுப்படி, கெம் கெம் குழு பகுதி ஒரு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆபத்தான வேட்டையாடும் டைனோசர்களின் தலைநகரமாக இருந்துள்ளது. அதேபோல், போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, தென்கிழக்கு மொராக்கோ சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு வகையான நீர் வாழ் மற்றும் நிலப்பரப்பு விலங்குகளால் நிரப்பப்பட்ட ஒரு பரந்த நதி அமைப்பைக் கொண்டிருந்தது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கெம் கெம் குழுமத்தில் இதுவரை மூன்று மிகப்பெரிய மாமிசம் உண்ணும் டைனோசர்களின் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், சேபர்-டூத், டெல்டாட்ரஸ் (Dஎல்டட்ரொஉஸ்), கொடூரமான பறக்கும் ஊர்வன விலங்கான ஸ்டெரோசாரஸ்கள் (Pடெரொஸௌர்ஸ்) மற்றும் முதலை போன்ற வேட்டையாடும் விலங்குகள் இந்த பகுதியில் உயிர்வாழ்ந்துள்ளது. அதேபோ, இங்கு வசித்த வேட்டையாடும் விலங்குகள் பெரும்பாலும் கடல் உயிரினங்களை இரையாக சாப்பிட்டு உயிர்வாழ்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த இடம் முற்றிலுமாக மிக பெரிய மற்றும் மாபெரும் மீன் இனங்களால் நிறைந்துள்ளது.
குறிப்பாககோயிலகந்த் என்ற மீன் வகையும் லங்பிஷ் மீன் வகையும் இன்றைய காலகட்டத்தில் காணப்படும் மீன்களை விட நான்கு முதல் ஐந்து மடங்கு மிக பெரியதாக இருந்திருக்கிறது. அதேபோல், முள் குத்துக்களைப் போன்ற பளபளப்பான பற்களைக் கொண்ட மாபெரும் மகத்தான நன்னீர் சுறா வகையும் இந்த பகுதியில் உயிர் வாழ்ந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் இந்த கண்டுபிடிப்பு, மொரோக்கோ பகுதி முற்றிலுமாக பற்களால் நிரப்பப்பட்ட கொடூரமான நீர்வாழ் விலங்குகள் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்களுடன் செழிப்பான இடமாக இருந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. சுமார் 10கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒருவேளை மனிதர்கள் உணவுச் சங்கிலியின் மேல் தளத்திலிருந்திருந்தால், இந்த இடம் ஒரு உயிர் வாழ மிக அருமையான இடமாக இருந்திருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
பூமியின் வரலாற்றில் மிக கொடூரமான இடமாக இந்த இடம் தான் இருந்திருக்கிறது என்று அறிவியல் உண்மைகளுடன் விஞ்ஞானிகள் தற்பொழுது நிரூபித்துள்ளனர். 10கோடி ஆண்களுக்கு முன்பு மிகப்பெரிய நதிகள் பெருக்கெடுத்து ஓடி, பசுமையாகப் பல உயிர் வாழும் இடமாக விளங்கிய இந்த கொடூரமான பகுதி தற்பொழுது வறண்ட பாலைவனமாகக் காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.