- தமிழகம் முழுவதும் இபாஸ் முறை ரத்து. வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வருவோருக்கு இபாஸ் முறை தொடரும்.
- அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.
- மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் போக்குவரத்து செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் செயல்பட அனுமதி.
- சென்னையில் மெட்ரோ ரயில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி.
- வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள், 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. எனினும் வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயங்க அனுமதி கிடையாது.
- தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் 8 மணிவரை இயங்கலாம்.
- டீக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் பார்சல் 9 மணிவரையிலும் இயங்க அனுமதி.
- தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. தவிர்க்க முடியாத பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களை தவிர பிற பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி.
- பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், திறக்க அனுமதி.
- திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி.
- அரசு அலுவலகங்கள் செப்.1 முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும்.
- வங்கிகள், மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
- நீலகிரி மாவட்டத்திற்கும் கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களுக்கு வெளியூர் சுற்றுலாத்தலங்கள் செல்ல மாவட்ட ஆட்சியரிடம் இபாஸ் பெற வேண்டும்.
- திரைப்பட படப்பிடிப்புக்கு ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி.
- ஞாயிற்றுகிழமைகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த முழுமுடக்கம் ரத்து.
- மாநிலங்களுக்கு இடையேயான் ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் அனுமதி. மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் செயல்பட செப்.15 வரை அனுமதி கிடையாது.
+1
+1
+1
+1
+1
+1
+1