மனைவி மற்றும் மகள் டிக்டாக் ஆப் மூலம் அறிமுகமான கண்ட நபர்களுடன் காதல் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியதால் மனமுடைந்த கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம், பொம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி வயது 42 நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவரது மனைவி கனகவள்ளி வயது 37. மகள் நிவேதா வயது17, பதினொன்றாம் வகுப்பு படித்துவரும் மாணவி. மகன் குருபிரசாத் வயது 15, பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர். தாய் கனகவள்ளி பெண்கள் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், பதினொன்றாம் வகுப்பு மாணவியான மகள் நிவேதா பள்ளி முடித்து வீட்டிற்க்கு வந்து நேரம் கிடைக்கும்போதும், தற்போது ஊரடங்கு காலம் என்பதால் பள்ளிகள் செயல்படததாலும் தாய் கனகவள்ளி பணிபுரியும் அழகு நிலையத்திற்கு சென்று தனது தாய்க்கு உதவி செய்து வந்துள்ளார். இந்த நிலையில், பிரபல சீன ஆப் டிக்டாக் மூலம் ஏற்பட்ட கள்ள தொடர்பில் ஒரு நபருடன் நிவதாவுக்கு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் தங்கள் காதலை வளர்த்துள்ளனர். இதேபோன்று நிவேதாவின் தாயார் கனகவள்ளிக்கும் அந்த டிக்டாக் ஆப் மூலம் ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு நாளடைவில் கள்ள காதலாக வளர்ந்துள்ளது.
தாய் கனகவள்ளியும், மகள் நிவேதாவும் கள்ளதொடர்பு காதல் வயப்பட்டு மணிகணக்கில் கைபேசியில் பேசி வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அழகு நிலையத்திற்கு வரும் தொடர் வாடிக்கையாளர்கள் உரிமையாளரிடம் புகார் தெரிவித்ததையடுத்து கனகவள்ளியை அழகு நிலைய உரிமையாளர் கூப்பிட்டு கண்டித்துள்ளார். இருந்தபோதிலும் டிக்டாக் ஆப்பில் இருவரும் தங்கள் கள்ள காதலர்களுக்கு அடிமையாகி கிடந்துதுள்ளனர். இதனை கணவர் ரவி அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் கனகவள்ளியும், நிவேதாவும் வீட்டை விட்டு திடீரென்று மாயமாகினர். இதனை தொடர்ந்து ரவி, திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் காவல்நிலைய அதிகரிகளிடம் புகாரளித்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல் அதிகாரிகள் தாய், மகள் இருவரையும் கண்டுபிடித்து ஒழுக்கமாக குடும்பத்துடன் வாழுமாறு அறிவுரை கூறி கணவர் ரவியிடம் ஒப்படைத்துள்ளனர்.
இருப்பினும் கள்ள காதலனை காண முடியாத ஏக்கத்தால் தாய், மகள் இருவரும் மீண்டும் வீட்டை விட்டு மாயமாகினர். மாயமாகிய இருவரும் ஈரோட்டில் இருப்பதாக கணவர் ரவிக்கு தகவல் கிடைக்க அவர் கடந்த திங்கட்கிழமை அங்கு சென்று கனகவள்ளியை திரும்ப தன்னுடன் வந்துவிடுமாறு அழைத்துள்ளார். கனகவள்ளி தன் கணவன் ரவியை மோசமான வார்ததைகளால் பேசி கணவர் ரவியை அவமானப்படுத்தி அனுப்பியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து வீட்டிற்கு திரும்பிய கணவர் ரவி, கைபேசியில் தனது மனைவி, மகளின் கள்ள காதலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மனைவி, மகளை மீட்டு பத்திரபடுத்துமாறும் கைபேசியில் காணொளி ஒன்றை வெளியிட்டு அத்துடன் இல்லாமல் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் ரவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காணொளியை ஆதாரமாக கொண்டு சம்பந்தபட்டவர்கள் மீது அனுப்பர்பாளையம் காவல் அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.