
திருவண்ணாமலையில் தனியாக தங்கியிருந்த அமெரிக்கப் பெண்ணை ஒரு சாமியார் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஆர்கான் மாகாணத்தைச் சேர்ந்த 32 வயது இளம்பெண், திருவண்ணாமலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சென்ற எட்டு மாதங்களாக தங்கி உள்ளார். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், நாமக்கல் மாவட்டம் திருமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் வயது 34, என்பவர் சாமியாராக இருந்து வருகிறார். இவர், கிரிவலப்பாதை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுற்றித் திரியும்போது அருணாச்சலேஸ்வரர் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அமெரிக்க இளம்பெண்ணைப் பார்த்துள்ளார். இதனால் சென்ற ஒரு மாதமாக அந்தப் பெண்ணை சாமியார் நோட்டம் போட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பில் அமெரிக்கப் பெண் தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்குச் சென்று அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார் சாமியார். அப்போது அமெரிக்கப் பெண் சாமியாரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் சாமியாருக்கு பெருத்தகாயங்கள் ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்தப் பெண் சத்தமிட்டதில் அருகில் உள்ளவர்கள் வந்து சாமியாரை பிடித்து தர்ம அடி கொடுத்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய காவல் அதிகாரிகளிடம் ஓப்படைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் அந்தப் பெண்ணிற்கு சில காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த திருவண்ணாமலை சாமியாரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 comment
Oh my goodness! Impressive article dude! Thank you so much, However I am experiencing troubles with your RSS. I don’t know the reason why I cannot subscribe to it. Is there anybody having the same RSS issues? Anyone who knows the answer can you kindly respond? Thanx!!