
அறிவியலாளர்கள் வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழுமா? அதற்கான சாத்தியம் இருக்குதா? அல்லது வேறு அறிகுறி எதுவும் கிடைக்குமா? என்று விண்வெளியில் பலமட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆனால், இந்த தொழில்நுட்ப வளர்ச்சி காலத்திலும், மனிதர்களால் ஆராய்ந்து பார்க்க முடியாத ஒரு இடம் பூமியிலேயே உள்ளது என்றால் அது நிச்சயம் ஆழமான கடலில் காணப்படும் மரியானா அகழியாக மட்டுமே இருக்கக் கூடும். ஹூவாய் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் இடையே குவாம் என்ற சிறிய தீவுக்கு அருகில், தண்ணீர் மேற்பரப்பிற்கு மிக ஆழமாக, மரியானா அகழி அமைந்திருக்கிறது. மரியானா அகழி தான் பூமியில் அமைந்துள்ள கடல்களின் மிகவும் ஆழமான பகுதி, இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கவே முடியாத பல மர்மங்கள் அந்த ஆழ்கடல் அகழியில் தான் மறைந்துள்ளது. உலகின் மிக ஆழமான மரியானா அகழியின் கீழே இருப்பது என்ன? என்ன இதுவரை அங்கு கண்டுபிடித்துள்ளனர். இந்த நாள் வரை மனிதனின் காலடி படாத ஒரே இடம் மிக ஆழமான கடலாக மட்டும் தான் இருக்கக்கூடும், ஏன் எதிர்காலங்களில் கூட இதற்கான சாத்தியம் வெறும் 0.02 சதமானம் தான் என்றே கூற முடியும். மனிதனின் காலடி பட வாய்ப்பே இல்லாத இந்த இடத்தை பற்றி இதுவரை நமக்குத் தெரிந்து, ஆச்சரியமிக்க உண்மைகள் என்னவென்றால், இந்த ஆழ்கடல் அகழியில் பல புதிர்கள் மறைந்திருக்கிறது என்கின்றனர் அறிவியல் விஞ்ஞானிகள்.

நம் கண்களுக்கு முழுவதுமாக தென்படாத, பல எண்ணிலடங்கா இரகசியங்களை இந்த அகழி மறைத்து வைத்திருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பூமில் உள்ள மலைகளில் இருப்பது போலவே கடலின் அடியிலும் எரிமலைகள், சிறு குன்றுகள், பள்ளத்தாக்குகள், மிகப்பெரும் மலைத்தொடர்கள் என்று அனைத்தும் அங்கு இருக்கின்றது. மனிதனால் இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல கடல் வாழ் உயிரினங்கள் இந்த ஆழ்கடலில் வாழ்கின்றது. இன்னும் பல மர்ம அதிசயங்கள் அந்த பகுதியில் மறைந்து காணப்படுகிறது என்பது தான் முற்றிலும் உண்மை. பூமியின் ஆழ்கடலை இன்னும் மனிதன் முழுமையாக ஆராய்ச்சி செய்யாததற்கு முக்கியமானக் காரணம், கடலின் அடியில் உள்ள அழுத்தம் தான். ஆழ்கடலுக்குள் நாம் கீழே போக போக தண்ணீரின் எடை அதிகரித்து, அதனால் நீரின் அழுத்தம் அனைத்து பக்கங்களிலிருந்தும் அதிகரிக்கிறது. வழக்கமான கடல் நீரின் அழுத்தத்தைப் போல் அல்லாமல், மரியானா அகழியின் ஆழ்கடல் நீர் அழுத்தம் 1000 மடங்கிற்கும் கூடுதலானது என்கின்றனர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்.

அந்த ஆழ்கடலில் உள்ள அழுத்தம் ஒரு பெரிய சவால் என்றால், மரியானா அகழியில் மற்றும்மொரு சவலும் இருக்கிறது, அது தான் ஒளி. ஆழ்கடலின் அழமான பகுதிக்கு போக போக சூரிய ஒளியானது மங்க துவங்கிவிடும். அதனால் ஒரு குறிப்பிட்ட தூர எல்லைக்குகுப் பிறகு அந்த ஆழ்கடலில் வெறும் இருட்டாகத்தான் காணப்படும். சூரிய ஒளியானது சுமார் இருநூறு மீட்டர் ஆழம் வரை மட்டுமே நீரில் ஊடுருவும். அதைத்தொடர்ந்து அடுத்த ஆயிரம் மீட்டர் ஆழம் வரை நீரில் ஓரளவு ஓழி வெளிச்சம் இருக்கும். மனிதன் சுவாசக் கருவியின் உதவிகளோடு நீருக்கு அடியில் ஆயிரம் அடி தூரம்வரை மட்டுமே பயணிக்க முடியும். மனிதனால், நீண்ட நேரம் கடலின் ஆழத்தில் செல்ல முடியாது, ஆழ்கடல் நீரின் அழுத்தத்தினால் மனிதனின் உடலில் சில உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அங்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் கூட ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு மேல் பயணிக்காது. ஏன் என்றால், கடல் நீரின் அழுத்தத்தால் நீர்மூழ்கிக் கப்பலும் கூட வெடித்துச் சிதற வாய்ப்புகள் அதிகம். இதனால் தான் மனிதன் இன்னும் ஆழ்கடலை முழுமையாக ஆராய்ந்து முடிக்க முடியவில்லை.

மரியானா அகழியில் அமைந்திருக்கும் “சேலஞ்சர் மடு” என்ற பள்ளத்தாக்கு தான். பசிபிக் கடலில் உள்ள மிகவும் ஆழமான பகுதி, இந்த பகுதியை “மரியானா நீள்வரிப்பள்ளம்” என்றும் அழைக்கின்றனர். இது சுமார் 2550 கிலோ மீட்டர் நீளமும், 69 கிலோ மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. இதன் ஆழம் சுமார் கிட்டத்தட்ட 7 மைல் ஆகும். அதாவது ஓரளவுச்சரியாகச் சொன்னால் 36,201 அடி, கிட்டத்தட்ட இந்தியாவின் இமயமலையை விட உயரமானது ஆகும். இந்த அதலபாதள படுகுழியில் இந்தியாவின் இமயமலையை மூழ்கடித்துவிடலாம் என்று நேஷனல் ஜியோகிராஃபிக் ஊடகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நேஷனல் ஜியோகிராஃபிக் ஊடகத்தின் கருத்துப்படி, எவரெஸ்ட் மலை சிகரத்தை இந்த மரியானா அகழியின் அடிப்பகுதியில் வைத்தால், அதன் முகடு கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,000 அடி ஆழத்திற்கு கீழே அமைந்திருக்கும் என்றால், அதன் ஆழத்தை நாம் புரிந்துகொள்ளலாம். இப்படி நாம் நம்பமுடியாத பூமியின் மிக ஆபத்தான பகுதியை, இதுவரை மூன்று நபர்கள் மட்டுமே அதன் வெவ்வேறான விதங்களை ஆராய்ந்துள்ளனர் என்றால் நம்புவோமா என்ன? ஆம் நாம் நம்பித்தான் ஆகவேண்டும், ஒரு மூன்று நபர்கள் மட்டுமே இந்த ஆழ்கடல் அகழியின் மிகப்பெரும் ஆழத்தை அங்கு சென்று ஆராய்ந்துள்ளனர்.

ஜாக்ஸ் பிக்கார்ட் மற்றும் கடற்படை லெப்டினன்ட் டான் வால்ஷ் ஆகியோர், 1960 ஆம் ஆண்டில் அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் உதவியுடன் அந்த சவால்விடும் கடலின் ஆழத்தை ஆராய்ந்துள்ளனர். மரியானா அகழியின் ஆழத்தை ஆராய மேற்கொள்ளப்பட்ட முதல் பயணம் அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மிகக்கடுமையான கடல் நீர் அழுத்தத்தினால் அவர்களால் 20 நிமிடங்கள் மட்டுமே அந்த ஆழ்கடலில் தங்கள் பயணத்தை செலவிட முடிந்துள்ளது. அதற்குப் பின் 50 வருடங்களாக யாரும் அந்த விபரீத முயற்சியை மேற்கொள்ளவில்லை, ஆம அந்த ஒருவரைத் தவிர, யார் அந்த ஒருவர்? சுமார் 50 வருடங்களுக்குப் பிறகு, 2012 ஆம் ஆண்டில் திரைப்படத் தயாரிப்பாளரும், அறிவியல் புனைகதை ஆர்வலருமான ஜேம்ஸ் கேமரூன் மரியானா அகழியை நோக்கி தான் உருவாக்கி வடிவமைத்த நீர்மூழ்கி கப்பலில் சவால்விடும் ஆழ்த்திற்கு குட்டிக்கரணம் அடித்தார். கேமரூன் வடிவமைத்து உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பலின் உதவியுடன் அவரால் அங்கு சுமார் மூன்று மணி நேரம் செலவிட முடிந்தது என்பது உலகம் அறிந்தது. அந்த பயணத்தின் போது அவர் பல புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அவர் பதிவு செய்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட கடல் ஆழத்திற்குப் பின்பு, அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட அவரின் நீர்மூழ்கி கப்பல் நீரின் அழுத்தம் தாங்காமல், கப்பலில் உள்ள உபகரணங்கள் பாதிப்படையத் துவங்கியுள்ளது. மின்கலம் மற்றும் ஒலி அலைகள் அறியும் கருவிகள் செயல் இழந்துவிட்டது மற்றும் அவரது கப்பலின் சில உந்துதல்கள் சரியாகச் செயல்படவில்லை, இதனால் அவர் பயணத்தைத் தொடரமுடியாமல் கப்பலுடன் ஜேம்ஸ் கேமரூன் கடலின் மேற்பரப்புக்கு வந்துதுள்ளார். இன்னும் பூமியின் ஆழ்கடல், மனிதனின் கால்ளுக்கு எட்டாத மர்ம அதிசயமாகவே இருந்து வருகிறது.