
ஊதிய சம்பள குறைப்பு மற்றும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, சென்னையில் ஸ்விகி(Swiggy) டெலிவேரி நிறுவனத்தின் உணவு லெலிவரி செய்யும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்விகி(Swiggy) டெலிவெரி நிறுவன டெலிவெரி ஊழியர்கள் உணவு கொண்டு செல்ல, முன்பு ஒரு டெலிவரிக்கு 40 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அது படிப்படியாக குறைக்கப்பட்டு, இப்போது 15 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக, டெலிவெரி தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சரின் தனி பிரிவில் புகார் அளித்த ஸ்விகி(Swiggy) நிறுவனத்தின் உணவு டெலிவரி செய்யும் தொழிலார்கள், சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர் காவல் அதிகாரிகளின் அறிவுறுத்தலை ஏற்று, அவர்கள் தர்ணாவை கைவிட்டனர். ஊரடங்கு உத்தரவால் கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ள இந்நிலையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.