புருஷனின் தப்பியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காம வெறியால் கணவரையே மனைவி கொலை செய்த கொடூரம் புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது.
புதுச்சேரி முதலியார்பேட்டை நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்த கோபிநாத் வயது 32, தனது மனைவி கவுசல்யாவுடன் வசித்து வந்தார். இனிமையாக சென்ற இவர்கள் இல்லற வாழ்க்கையில் கணவனுக்கு வில்லனாக வந்தது மணிவின் கள்ளக்காதல். கணவன் – மனைவிக்கு இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது. எனினும் உறவினர்கள் அவர்களை அவ்வப்போது சமாதானம் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தலை மற்றும் முகம் பகுதியில் ரத்த காயங்களுடன் கோபிநாத், வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கியபடிகிடந்தார். இதை பார்த்து அதிர்ந்த அக்கம் பக்கத்தினர், முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தினர். விசாரணையில் கோபிநாத்தின் தம்பி உறவுமுறையான சித்தப்பா மகன் கார்த்தி என்பவருக்கும், அவர் மனைவி கவுசல்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது வெளிவந்தது.
இதனை அறிந்த கோபிநாத், மனைவி கவுசல்யாவை அடிக்கடி கண்டித்து சண்டையிட்டுள்ளார். அத்துடன் தனது சகோதரன் கார்த்தியையும் எச்சரித்துள்ளார். இந்த நிலையில் கவுசல்யா வீட்டில் இருக்கும் போது கணவருக்கும், கவுசல்யாவின் கள்ளக்காதலனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கார்த்தி சரமாரியாக தாக்கியதில் கோபிநாத் இறந்து போனார்.
இதனால் போலீசில் இருந்து தப்பிக்க கோபிநாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போன்று கார்த்தியும், கவுசல்யாவும் நாடகமாடி இருப்பது அம்பலமாகியுள்ளது. இது குறித்து முதலியார்பேட்டை போலீசார், இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.