
இந்திய பிரதமரைத் தவிர அனைவரும் இந்திய ராணுவத்தின் வலிமையையும், வீரத்தையும் நம்புவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள், இந்தியப் பொருளாதாரம், சீன எல்லைப் பிரச்னை உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து இந்தியநாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்த தன்னுடைய கருத்தை பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக முன்வைத்து வருகிறார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாரத பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர எல்லோரும் இந்திய இராணுவத்தின் திறனையும் வீரத்தையும் நம்புகிறார்கள். யாருடைய கோழைத்தனம் சீனாவை, எங்கள் நிலத்தை எடுக்க அனுமதித்தது. யாருடைய பொய்களோ அவர்கள் வைத்திருப்பதைக் காட்டும்’ என்று அதில் பதிவிட்டுள்ளார்.
1 comment
Your grandfather my dear pappu.