இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், உத்தரபிரதேசம் மாநில கேபினட் அமைச்சருமான சேத்தன் சவுகான் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 73.
சேதன் சவுஹான் உயிரிழந்ததை அவரது தம்பி புஷ்பேந்திர சவுகான் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் உறுதி செய்துள்ளார். உத்தரப் பிரதேசம் மாநில தொழில்நுட்ப கல்வித் துறையில் அமைச்சராக பதவி வகித்த கமல் ராணி வருண் அண்மையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இவரையடுத்து, அந்த மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இரண்டாவது அமைச்சராக சேதன் சவுகான் பலியாகி உள்ளார். சேதன் சவுகான் உத்தரப் பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தில், வீட்டுக் காவல், மக்கள் நலவாழ்வு, சமூக பாதுகாப்பு உள்ள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.
சேதன் சவுகானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து லக்னோவில் உள்ள சஞ்ஜய் காந்தி பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய சிறுநீரகம் பழுதடைந்ததைத் தொடர்ந்து உயிர் பாதுகாப்பு ஆதரவில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் சேதன் சவுகான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேதன் சவுகான் இந்திய கிரிக்கெட் அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கும் (டி.டி.சி.ஏ) அவர் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்துள்ளார்.
1 comment
Hey, I think your blog might be having browser compatibility issues.
When I look at your blog in Opera, it looks fine but when opening in Internet Explorer,
it has some overlapping. I just wanted to give you a
quick heads up! Other then that, fantastic blog!