
அமெரிக்க அரசின் தனிப்பட்ட தகவல்களை சீன செயலியான “டிக்டாக்” திருடுவதாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு, அந்த செயலியை அமெரிக்காவில் முடக்கியுள்ளது.

சீனாவுக்கு சொந்தமான மொபைல்போன் செயலிகள் அமெரிக்க நிறுவனங்களிடம் விற்கப்படுமேயானால் அவை அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும் எனஅதிபர் டிரம்ப் அரசு தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘சீனாவைச் சேர்ந்த பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அலிபாபாவை அமெரிக்காவில் முடக்கக் திட்டமிட்டுள்ளோம், எனத் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சீனா, அரசியல் லாபத்துக்காக பழிவாங்கும் டிரம்ப் சர்வதேச சட்டத்தை மீறி வருகிறார் என, சீன வெளியுறவுத்துறை மிக காட்டமாகத் தெரிவித்துவருகிறது.
+1
+1
+1
+1
+1
+1
+1