மத்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனமானது நீண்டகாலமாக நிதி நெருக்கடியில் சிக்கி, இயங்கி வருகிறது.
கொரோனா தொடர்பான ஊரடங்காலும் ஏர் இந்தியா தொடர்ந்து பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. முன்னதாக, 2019-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ஏர் இந்தியாவின் மொத்த கடன் ரூபாய் 58,351.93 கோடியாக இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.
இதனால், இந்த நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது. இதை வாங்க பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், டாடா நிறுவனமானது ஏர் இந்தியாவை வாங்க முயற்சி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
+1
+1
+1
+1
+1
+1
+1