
கர்நாடகா மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் தனது இறந்த மனைவிக்கு மெழுகு சிலை வைத்து கிரகபிரவேசம் நடத்தி நாட்டின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தினைச் சேர்ந்தவர் சீனிவாச குப்தா, பிரம்மாண்டமான வீடு கட்டி கிரகபிரவேசம் நடத்த விரும்பினார். ஆனால் அவருடைய மனைவி தற்போது உயிருடன் இல்லை, சென்ற சில வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டார்.


இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த சீனிவாச குப்தா தனது மனைவியைப் போலவே மெழுகு சிலை ஒன்றை உருவாக்கி சோபாவில் அமர்ந்த நிலையில் வைத்துள்ளார். அச்சு அசலாக அவரது மனைவியின் முக அமைப்புடன் இருந்த மெழுசிலைக்கு மனைவிக்கு பிடித்த இளஞ்சிவப்பு நிற புடவையை அணிவித்து அதனுடன் அவர் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.



அவருடைய மனைவியே அவருக்கு நேரில் வந்து குடும்பத்துடன் புதுமனை புகு விழாவை கொண்டாடியது போல இருந்தது. சீனிவாச குப்தாவின் 2 மகள்களும் அப்பா மற்றும் அம்மாவை இருக்கையில் உட்கார வைத்து இருவர் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதன் அனைத்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வந்து அவருக்கு பெருமையை சேர்த்துள்ளது.