
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

முதலாமாண்டு மாணவர்களை தவிர அனைத்து இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும். அடுத்த பருவம் டிசம்பர் 14-ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதேபோல் அக்டோபர் 26-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பி.இ. செய்முறை தேர்வு அக்டோபர் 15 முதல் நவம்பர் 9-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
+1
+1
+1
+1
+1
+1
+1