
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிலையங்கள் அனைத்தும் சென்ற ஐந்து மாதங்களாக மூடப்பட்டுள்ளன.

மீண்டும் கல்வி நிலையங்கள் எப்போது திறக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சில மாநிலங்கள் கல்வி நிலையம் திறப்புகான தேதியை அறிவித்து, அதற்குறிய முன்னேற்பாடுகளை செய்து வருகின்றது.

தமிழகத்திலும் வருகின்ற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பள்ளிகள் திறப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக பள்ளிகளை தூய்மை செய்ய வேண்டும். குடிநீர், கழிப்பிட வசதிகளை சரியாக பராமரித்து சுத்தம் செய்ய வேண்டும் என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த ஏற்பாடுகள் பள்ளிகளில் செய்யப்பட்டு வரும் நிலையில் விரைவில் பள்ளிகளை திறப்பதற்கான அறிவிப்பு வெளி வரலாம் என தமிழக மககளிடையே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.