
தமிழகத்தின் சுகாதார நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதிலும் தற்போது கொரோனா காலத்தில் மிகவும் சிரத்தை எடுத்து அனைத்து துறையினரும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழ்நாடு புகைப்பிடித்தல் மற்றும் எச்சில் உமிழ்தல் சட்டத்தின் படி ஒரு முறை எச்சில் துப்பினால், ரூ.100, இரண்டாவது முறை துப்பினால் ரூ.200, மூன்றாவது முறை துப்பினால் ரூ.500 என அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு இத்தகைய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
+1
+1
+1
+1
+1
+1
+1