
திமுக சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ. அன்பழகன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஜூன் மாதம் 10-ஆம் தேதி உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து அந்த மாவட்ட பொறுப்பில் வருவதற்கு தி மு க கட்சியினர்க்ளுக்குள்ளே கடுமையான போட்டி சண்டை நிலவிய சூழலில் யாரும் எதிர்பாராத வண்ணம் அம்மாவட்ட திமுகவின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக சிற்றரசு நியமிக்கப்பட்டுள்ளார். திமுக கட்சியில் மூத்த உறுப்பினர்கள் பலர் இருக்கையில் சிற்றரசு நியமிக்கப்பட்டதால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கடுமையான அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த சூழ்நிலையில்தான் சென்னை மேற்கு மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் தி மு க கட்சியின் தலைமை நிலையச் செயலாளரமான கு.க. செல்வம் கடுமையான அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இதனால்தான் பாஜகவில் இணைவதற்காக அவர் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதற்காக பாஜக மூத்த தலைவர்களிடம் பேசியபோது சென்ற இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கூறின. இந்நிலையில், இன்று மாலை டெல்லியில் ஜே.பி நட்டா தலைமையில் அவர் பாஜகவில் இணைய உள்ளார். இதற்காக நேற்றிரவே, அவர் இந்திய தலைந்கரான டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.