
பாலியல் தொல்லை தந்த கணவனை அடித்து கொன்ற மனைவி நேரடியாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இரவு, என்றும் பகல் என்றும் பாராமல் எப்ப பார்த்தாலும் பாலுறவுக்கு வற்புறுத்தி கொடுமை செய்த கணவனை, மனைவியே கொன்ற சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் மதுரையில் அடங்கவில்லை. அவரது இந்த கொலை தொடர்பான பல தகவல்கள் இப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன. உயிரிழந்தவரின் ஆணுறுப்பை நசுக்கியது அவரது மைத்துனர் தான் என்பது தற்போது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது.

மதுரை மாநகரம் அருகே உள்ள நகரம் திருமங்கலம். அந்த ஊரைச் சேர்ந்தவர் சுதீர் என்கிற சுந்தர். இவருக்கு 34 வயதாகிறது. இவருக்கும், அருள் செல்வி என்பவருக்கும் எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இந்தத் தம்பதிக்கு அழகான பெண் குழந்தையும் உள்ளது. அருள் செல்வி ஒரு ஆசிரியை ஆவார்.


மருத்துவர்களிடம் தனது கணவர் கட்டிலிலிருந்து கீழே விழுந்து விட்டதாக கூறியுள்ளார் அருள் செல்வி. மருத்துவர்களும் பரிசோதித்து விட்டு இறந்து விட்டதாக அருள் செல்வியிடம் அறிவித்தனர். இந்த நிலையில் திடீரென அங்கு காவல் ஜீப் வந்து நின்றது. ஜீப்பிலிருந்து குதித்து வெளியே வந்த காவல் அதிகாரிகள் அருள் செல்வியை மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர். சுதீருக்கு என்னாச்சு.. எப்படி இறந்தார் என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்கவும், அருள் செல்வியும் கதறி அழுதபடி பல உண்மைகளைக் காவல் அதிகாரிகளிடம் கக்கினார்.

சுதீருக்கு உடலுறவு என்றால் ரொம்பப் பிரியம் போல. எப்பப் பார்த்தாலும் மனைவியுடன் வித விதமாக உடலுறவு வைத்துக் கொள்ள ஆசைபடுவாராம். மெலும் அவர் குடி போதை வேறு. மது உள்ளே போய்விட்டால் மதுவாகிய மனைவி அருள் செல்வியை உண்டு இல்லை என்று செய்து விடுவாராம். மனைவியும் தன் கணவராச்சே என்று வெகு நாட்களாக பொறுத்துப் போயுள்ளார். ஆனாலும் சுதீரின் வல்லுறவுத் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போயுள்ளது. இருந்தாலும் தன் கணவர் என்ற ஒரே காரணத்துக்காக சுதீர் கொடுத்த வல்லுறவு தொல்லை அத்தனையையும் பொறுத்துப் போயுள்ளார் அருள் செல்வி.

இந்த நிலையில்தான் சுதீர் இறந்த சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த சுதீர், மனைவி அருள் செல்வியுடன் வழக்கம் போல பாலுறவுக்கு இறங்கியுள்ளார். அப்போது அவர் நல்ல மதுபோதையிலும் இருந்துள்ளார். மனைவியுடன் வழக்கம் போல முரட்டுத்தனமான பாலுறவில் இறங்கிய அவர் முற்றிலும் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட அருள் செல்வியை வலியுறுத்தியுள்ளார். அதைக் கேட்டு கோபமாகி விட்டார் அருள் செல்வி. முடியாது எனறு மறுத்துள்ளார் அருள் செல்வி.

ஆனால் சுதீரின் ஆண்மை நிற்கவில்லை. அருள் செல்வியை தொடர்ந்து உடலுறவுக்கு வருமாறு வலியுறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த அருள் செல்வி அவரிடமிருந்து விடுபட்டு வெளியேறினார். பின்னர் சமயலறைக்குச் சென்று பாலில் தூக்க மாத்திரைகளைப் போட்டு அதை அவர் கட்டாயப்படுத்தி கணவருக்குக் கொடுத்தார். அவர் மயக்கமடைந்ததும் தனது சித்தி பாலாமணி மற்றும் அவரது மகன் சுமேர் ஆகியோரை வரவைத்துள்ளார். அவர்கள் வந்து ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்து சுதீர் முகத்தில் இறுக்கி சுதீரை மூச்சுத் திணறடித்துக் கொலை செய்துள்ளனர்.

சுமேர் அப்போது கோபாத்தின் உச்சமாக ஆவேசத்துடன் சுதீரின் ஆணுறுப்பை சரமாரியாக அடித்து நசுக்கியுள்ளார். அதில் சுதீரின் ஆணுறுப்பு நசுங்கியே போய்விட்டதாம். இந்த ஆணுறுப்பில் இருந்த காயம்தான் மருத்துவர்களை யோசிக்க வைத்துள்ளது. கட்டிலிலிருந்து கீழே விழுந்தால் சுதீரின் ஆணுறுப்பு இந்த அளவுக்கு சிதைந்து நசுங்கி இருக்காதே என்ற சந்தேகத்தில்தான் அவர்கள் தந்திரமாக காவல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

காவல் அதிகாரிகள் வந்து விசாரித்தவுடன் தான் மாட்டியுள்ளார் சுதீரின் மனைவி அருள் செல்வி. இந்த விவரம் வெளியானதைத் தொடர்ந்து அருள் செல்வியை காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கணவர் சுதீரின் பாலியல் தொல்லை தாங்காமல், அருள் செல்வி தனது உறவினர்களை வைத்து கொலை செய்த சம்பவம் மதுரை மாநகரயே பெரும் பரபரப்புக்கு ஆழ்த்தியுள்ளது.