மதுரையில் யூடியூப் விமா்சகா் மாரிதாஸ் வீட்டில் சென்னை சைபா் குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சூா்யா நகர் பகுதியை சோந்தவா் மாரிதாஸ். யூடியூப் விமா்சகரான இவா், நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக விமா்சித்ததாகவும், அந்நிறுவனத்தின் பெயரில் போலியான மின்னஞ்சல் மூலம் தவறான செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடா்பாக நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நிறுவனம் தரப்பில், சென்னை சைபா் குற்றப்பிரிவில் மாரிதாஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயா்நீதிமன்றத்திலும் அவா் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை சைபா் குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையா் சரவணகுமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் மதுரை சூா்யா நகரில் உள்ள மாரிதாஸ் வீட்டில் சோதனை நடத்தினா். அங்கு மாரிதாஸிடம் விசாரணை நடத்திய காவல் அதிகாரியுடன் முதலில் மாரிதாஸ் ஒத்துழைக்க மறுத்துள்ளார். அதன் பிறகு மாரிதாஸ் வீட்டில் ரெய்டு நடத்துவதற்கான உத்தரவு நகலை காட்டிய பிறகு சம்மதித்துள்ளார் மாரிதாஸ். அவருடைய கம்ப்யூட்டர், கைபேசி மற்றும் பென்ட்ரைவ் உள்ளிட்டவைகளை காவல் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனா்.
ஆனால் அதில் உள்ள ஆவணங்களை காப்பி எடுக்க மாரிதாஸ் அவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை. அதன் பிறகு காவல் அதிகாரிகாள் வழக்குகிற்கு தேவையான ஆவணங்களை கட்டாயம் காப்பி எடுத்தாக வேண்டும் என்று தெரிவித்த பின்னர் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டார் மாரிதாஸ்.
அதன்பிறகு மாரிதாஸ் யூடியூப் சேனலுக்காக பயன்படுத்திய தகவல்கள் அடங்கிய முக்கியமான மடி கணினி, பென்ட்ரைவ் ஆகியவற்றை காவல் அதிகாரிகள் கைப்பற்றியிருக்கிறார்கள். அதில் உள்ள தகவல்கள் ஆராயப்பட்டு பின்னர் அந்த வழக்கு வலுப்படுத்தப்படும் எனத் தெரிய வந்துள்ளது. நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி கொடுத்த புகார்க்கான ஆவணங்கள் சிக்கினால் மாரிதாஸ் கைது செய்யப்படுவது உறுதி எனத் தெரியவந்துள்ளது.
சுமார் 8மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மற்றும் சோதனை நீடித்தது மாரிதாஸ் மற்றும் அவர் வீட்டில் நீடித்தது. அதன் பிறகு காவல் அதிகாரிகள் சென்னை புறப்பட்டு சென்றுள்ளனா். இந்த சோதனை குறித்தும், மாரிதாஸிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்தும் காவல் அதிகாரிகள் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, சைபா் குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் விசாரணை நடத்த வந்தபோது, சோதனை செய்ய உரிய ஆவணங்கள் இருக்கிறதா எனக் கேட்டு காவல் அதிகாரிகளுடன் மாரிதாஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். விசாரணைக்கான உத்தரவுகளை அவரிடம் காண்பித்த காவல் அதிகாரிகள், பின்னா் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
மாரிதாஸ் வீட்டில் சோதனை நடைபெறுவது குறித்து தகவலறிந்த மதுரை மாநகா் பாஜக தலைவா் சீனிவாசன் தலைமையில் வழக்குரைஞா்கள் மற்றும் கட்சியினா் வீட்டின் முன் கூடினா். இதையடுத்து காவல் அதிகாரிகள் சோதனையை முடித்துக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டனா். மாரிதாஸிடம் சைபா் குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மீண்டும் விசாரணை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
2 comments
Good news for DMK. ???
Saya terkagum membaca artikel ini karena setelah membaca artikel ini pikiran saya menjadi terbuka. Saya sadar, selama ini saya terlalu tertutup dengan hal-hal yang baru dan merasa sudah tahu. Hal ini berimbas kepada saya yakni saya menjadi orang yang Sok Tahu