பசுவை காப்பாற்ற பெண்கள் 70 அடி ஆழ கிணற்றில் குதித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலரும் அந்த பெண்களை பாராட்டி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு அருகே மேகுலர் கிராமத்தை சேர்ந்த விவசாயியான மாடசாமி என்பவர் பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் பசு மாட்டை மேய்ச்சலுக்காக அங்குள்ள கிணற்றுக்கு அருகே கட்டி வைத்து உள்ளார்.
அந்நிலையில் திடீரென பசு எதிர்பாராத விதமாக அங்குள்ள 70 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. இதை பார்த்த மாடசாமியின் மனைவி புவனேஸ்வரி பசுவை காப்பாற்ற சற்றும் யோசிக்காமல் கிணற்றில் குதித்துவிட்டார். இதை பார்த்த அவரது தோழியான சுதாவும் கிணற்றில் குதித்துவிட்டார்.
பிறகு கிணற்றில் விழுந்த பசுவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கயிறை கட்டி உடனடியாக கிணற்றில் இருந்த இரண்டு பெண்கள் மற்றும் பசுவையும் பத்திரமாக மீட்டனர். இதனை அடுத்து பசுவை காப்பாற்ற சற்றும் யோசிக்காமல் கிணற்றில் குதித்த இரண்டு பெண்களையும் பாராட்டினர்.