தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லாததால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆளுநா் மாளிகையில் பணியாற்றும் ஊழியர்கள் சில பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நான்கு நாட்களுக்கு முன் தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று திடீரென சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அதில் அவருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், அவருக்கு இலேசான வைரஸ் தொற்று இருப்பதாக கூறிய மருத்துவர்கள் வீட்டிலேயே அவரை தனிமைபடுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.