
தமிழ் நாட்டில் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தவரின் பெயரை வைப்பது அறுவறுப்பு என்றல் அஞ்சுகம் அம்மாள் என்ன அமெரிக்கா ஜனாதிபதியா? இல்லை இராசாத்தி என்ன இராஜ குடும்பமா? என உதயநிதி ஸ்டாலினை கலங்கடிக்கும் மீம்ஸ்கள் இணையதளத்தை கலங்கடித்து வருகிறது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்,

முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனையாலும், தலைவர் எம் கே ஸ்டாலின் அவர்களின் உழைப்பாலும் உருவான மெட்ரோ ரயில் நிலையத்துக்கு முதல் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவரின் பெயரை வைத்துள்ளது அதிமுக அடிமைக்கூட்டம். மெட்ரோ ஆகாதென மோனோ கேட்டவர் பெயரை, தி மு க கழக அரசால் வந்த மெட்ரோவுக்கு பெயராக வைப்பது அறுவறுப்பின் உச்சம் எனக் குறிப்பிட்டுள்ளார். உதயநிதியின் இந்த மகா மட்டமான கருத்துக்கு பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்த உதயநிதி மீம்ஸ்களும் இணையத்தை கலங்கடித்து வருகிறது. அதில், இராஜாத்தி என்ன இந்திய சுதந்திர போராட்ட தியாகியா? இராஜாத்தி பெயரில் எதுக்கு தெருப் பெயர். தமிழகத்தில் எந்த அரச பதவியை அலங்கரித்தார் என்று அவருக்கு இந்த அங்கீகாரம்?

ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தவர் பெயரை வைப்பது அறுவறுப்பு என்றால், அஞ்சுகம் அம்மாள் என்ன அமெரிக்கா ஜனாதிபதியா? இல்லை இராசாத்தி என்ன இராஜ குடும்பமா? திமுக வின் முதல் அமைச்சரவையில் இடம் பெற்ற பெண் அமைச்சர் சத்திய வாணி முத்துவின் பெயரை எத்தனை திட்டத்திற்கு சூட்டியிருக்கிறார் கருணாநிதி? சொல்லுங்கள் உதயநிதி.

ரயில்வண்டியை திருட்டு ரயில் என்று கூறிவிட்டு, ரயிலில் வித்அவுட்டில் வந்தவருக்கு மெரினாவில் சமாதியா என நாமும் பதிலுக்கு கேட்கலாம் தானே ?அசிங்கத்தின் மொத்தம் கருணாநிதியும் அவர் குடும்பமும். அசிங்கத்தின் மிச்சம் ஸ்டாலின். அசிங்கத்தின் சொச்சம் அநீதியான நீ உதயநிதி. அ இ அ தி மு க தலைவி மறைந்த அம்மாவின் பெயரை வைத்த காரணத்திற்காக எதிர்ப்பு தெரிவித்த தம்பி உதயநிதி, 2015 ஆம் ஆண்டுகளில் மெட்ரோ முதல் வழித்தடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது மாண்புமிகு தலைவி அம்மா தான்.

இந்த வரலாறெல்லாம் அப்போது நண்பேன்டா படத்தில் சந்தானத்துக்கு சைடு ரோலாய் நடித்து கொண்டிருந்த உதயநிதி ஆகிய உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என மீம்ஸ்களை போட்டு தி மு க இளைஞரே இல்லாத இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.