
ஆந்திர மாநிலத்தில் 33 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற போராடிய ஒருவர், கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றார்.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த நூருதீன் என்பவர், சென்ற 1987-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இதில் அவர் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. இருப்பினும் தனது விடாமுயற்சியால், கடந்த 33 ஆண்டுகளாக அவர் தோல்வியுற்ற ஆங்கில பாட தேர்வை எழுதி வந்துள்ளார். வெற்றிபெற 35 மார்க் என இருக்கும் நிலையில், அவர், 30 மற்றும் 33 மதிப்பெண்கள் எடுத்து, தொடர்ந்து தோல்வி அடைந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அவர் இந்த ஆண்டும் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். தற்போது, கொரோனா ஊரடங்கால், தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக ஆந்திர அரசு அறிவித்த நிலையில், நூருதீனும் தேர்ச்சி பெற்றார். இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக கூறியுள்ளார்.