கொதிக்கும் வெப்பநிலையில் உள்ள நீர் கொரோனா வைரஸை முற்றிலுமாக அழிக்கக்கூடும் என்று ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் அங்காராவை சேர்ந்த அரசு நடத்தும் “அனடோலு ஏஜன்சி” தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை அழிக்க இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை. அது குறித்து உலக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், துருக்கியின் அங்காராவை சேர்ந்த அரசு நடத்தும் “அனடோலு ஏஜன்சி” தகவல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, ரஷ்யாவின் வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி வெக்டாரின் மாநில ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வில், கொதிக்கும் வெப்பநிலையில் உள்ள நீர் கொரோனாவை முழுமையாகவும் உடனடியாகவும் அழிக்கக்கூடும் என்று பரிந்துரைத்தது.
மேலும் இதுவே அறை வெப்பநிலை (றூம் Tஎம்பெரடுரெ) நீரில் 90 சதவீத வைரஸ் துகள்கள், நீரில் 24 மணி நேரத்திலும், 99.9 சதவீத வைரஸ் துகள்கள் 72 மணி நேரத்திலும் இறக்கின்றன என்று அந்த ஆராய்ச்சி காட்டுகிறது. இந்த ஆராய்ச்சி முடிவுகள், கொரோனா வைரஸின் அழிவு என்பது, நீரின் வெப்பநிலையைப் பொறுத்தது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் சில நிபந்தனைகளில் தண்ணீரில் வாழ முடியும் என்றாலும், கடல் அல்லது நன்னீரில் வைரஸ் பெருக்கமடையாது எனவும் அந்த ஆய்வு கூறியுள்ளது. எஃகு, லினோலியம், கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் பீங்கான் தளங்களில், கொரோனா வைரஸ் 24 லிருந்து 48 மணி நேரம் வரை அதால் செயல்பட முடியும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.