
நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகின்ற தங்கம் விலை தற்போது 41 ஆயிரத்தை நெருங்கியுள்ள செய்தி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என மக்களிடையே எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தகர்த்து எறியும் வகையில் தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.40,824 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.28 அதிகரித்து ரூ.5,103 ஆக விற்பனையாகி வருகின்றது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.71.20 ஆக விற்பனையாகி வருகின்றது.
+1
+1
+1
+1
+1
+1
+1