குளச்சலில் உள்ள துறைமுகத்தில் கடந்த 1989 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் பாலம் கட்டுவதற்கான பணி தொடங்கியது. ஐந்து வருடங்களில் 170 மீட்டர் தூரம் வரை பாலம் கட்டி முடிக்கப்பட்டது. பின்பு, பணி கிடப்பில் போடப்பட்டது.
கடற்கரைக்கு செல்லுகிற மக்கள் மாலை நேரத்தில் இந்த பாதியில் முடிந்த பாலத்தில் அமர்ந்து பொழுது போக்குவது வழக்கமாக உள்ளது. இந்த பாலத்தை கப்பலில் மணல் ஏற்றுவதற்காக மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ மணல் ஆலை பயன்படுத்தியது. 1995 ஆம் ஆண்டிற்கு பிறகு கப்பல்கள் வரவில்லை. இதனால் பாலம் பயனற்று போனது. கடந்த 2016 ஆம் ஆண்டில் குளச்சல் மீன்பிடி துறைமுகம் செயல்படுவதற்கு முன்பு தேவையான தண்ணீரை டெம்போவில் கொண்டு வந்து பாலம் வழியாகத்தான் விசைப்படகுகளுக்கு ஏற்றியதாக கூறப்படுகிறது.
கடந்த சில வருடமாக பாலத்தில் காங்கிரீட் பெயர்ந்தும், கம்பிகள் துருப்பிடித்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் குளச்சலில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட கடல் சீற்றத்தல் ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பை தாண்டி விழுந்தன. தொடர்ந்து துறைமுக பாலத்தின் காங்கிரீட் பெயர்ந்து கடலில் விழுந்தது, காங்கிரீட் பெயர்ந்த பகுதியில் இரண்டு தூண்கள் தனியாக பிரிந்து காணப்படுகிறது. இந்த காங்கிரீட் பெயர்ந்த பகுதியில் தான் சிலர் மாலை வேளை அமர்ந்து தூண்டிலில் மீன் பிடித்து வந்தனர்.
தற்போது அந்த பகுதி ஆபத்தானதாக மாறிவிட்டது. ஏற்கனவே கடந்த சுனாமி, ஓகி புயல் போன்ற தாக்குதல் ஏற்பட்ட போது எழுபது மீட்டர் அளவு காங்கிரீட் பெயர்ந்தும், ஏழு தூண்களும் உடைந்து கடலில் விழுந்த குறிப்பிடத்தக்கது. காங்கிரீட் பெயர்ந்து உள்ள பகுதிக்கு மக்கள் செல்லாதவாறு துறைமுக அலுவலர் கயிறு கட்டி வைத்திருந்தாலும் ஆர்வ கோளாறில் சிலர் அதையும் தாண்டி சென்று வருகின்றனர்.
இது காண்போரை பீதியடைய செய்து இருக்கிறது. எனவே பொது மக்கள் பழுதடைந்துள்ள பாலத்தில் ஆபத்து பகுதிக்கு செல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
1 comment
Hi, i think that i saw you visited my website thus i came to “return the favor”.I’m attempting to find things to enhance my web site!I suppose its ok to use some of your ideas!!