
அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு இன்று வெற்றிகரமாக விண்கலம் ஏவப்பட்டது.

அமெரிக்காவின் நாசா விண்கலம் ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் விண்ணில் பாய்ந்தது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்டுள்ள ரோவர் விண்கலத்திற்கு ‘பெர்சிசவரன்ஸ்’ என்று நாசா, பெயரிட்டுள்ளது.

அமெரிக்க விண்கலம் செவ்வாய் கிரகத்தை பிப்ரவரி மாதம் சென்றடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த பெர்சிசவரன்ஸ்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் வரை தங்கி ஆய்வுகளில் ஈடுபடும். செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் என்பது பூமியைப் பொறுத்த மட்டில் 687 நாள்களாகும்.

இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தின் பழைமையான தன்மை குறித்தும், செவ்வாயில் மனிதன் வாழ இயலுமா என்ற சாத்தியக்கூறுகள் குறித்தும் தரவுகளை சேகரிப்பதோடு மட்டும் அல்லாமல், அங்கிருந்து, மண் மற்றும் பாறை ஆகியவற்றின் மாதிரிகளையும் சேகரித்து கொண்டுவரும் என்றும் நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது மனிதகுலத்தின் விண்வெளி ஆய்வு முயற்சிகளுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு விண்வெளி பயணமாக இருக்கும் என்று உலகமக்களல் எதிர்பார்க்கப்படுகிறது.