தமிழ்நாட்டின் கடைகோடியான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி சென்ற நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து காணாமல் போனதாக கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த சிறுமி நாகர்கோவில் பகுதியை சேர்ந்த காதலனுடன் திருமணம் செய்ய தலைமறைவாகியது தெரியவந்தது. அவர்களை காவலர்கள் மீட்டு, அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் அந்த சிறுமியை விசாரணை செய்ய குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்களது விசாரணையில், சென்ற 2017-ஆம் ஆண்டு சிறுமியின் அம்மா, முன்னாள் எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசனிடம் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக தனது மகளையும் அழைத்து சென்றதாகவும், அங்கு சிறுமிக்கு நாஞ்சில் முருகேசன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதேப்போன்று நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மேலும் சிலர் பாலியல் தொல்லை அளித்து துன்புறுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்ததின் பேரில், இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள்நல பாதுகாப்பு அதிகாரி புகாரளித்துள்ளார்.