
தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்திய மூர்த்தி பவன் மற்றும் தேனாம்பேட்டையில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடம் தொடர்பாக பரபரப்பான செய்திகள் பரவி வருகிறது. இந்த இடங்களில், மாபெரும் வளாகம் கட்டுவதற்கு, இராகுல் ஆசைப்படுகிறார் என, கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் ஊழல் நடக்கிறது என்று, சில காங்கிரசார் கூறி வருகின்றனர். சமீபத்தில் இது தொடர்பாக, ஒரு பிரபல “ஆடிட்டர் டுவீட்” செய்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மறுப்பும் தெரிவித்தார். இந்த விஷயம், இராகுலை பெரிதும் பாதித்துள்ளதாம்.

காங்கிரஸைச் சேர்ந்தவரும், தமிழக காங்கிரஸ் டிரஸ்ட்டின் அங்கத்தினருமான ஒருவர் தான், அந்த ஆடிட்டரைச் சந்தித்து,கட்சி உள் விவகாரங்களைப் பற்றி கூறியுள்ளர் என, சந்தேகித்து அவர் மீது கோபமாகவும் இருக்கிறாராம் இராகுல்.

இந்தியாவின் சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் எப்படி வெளியானது, இதன் பின்னணியில் இருப்பது யார், என்பது குறித்து விசாரிக்க, தன் அந்தரங்க ஆலோசகரான, கனிஷ்க் சிங்கிற்கு இராகுல் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து தமிழக காங்கிரஸ், தலைவர் அழகிரி மீது, இராகுலுக்கு நம்பிக்கையில்லை என தெரியவந்துள்ளதால் அழகிரியின் எதிர் கோஷ்டியினர் இதுபற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள்.