
அமெரிக்காவின் அறிவியல் வளங்களைக் திருடுவது, அமெரிக்காவை உளவு பார்ப்பது போன்ற தீவிரவாத குற்றச்சாட்டுகளை சீனா மீது அமெரிக்கா சாற்றி வருகிறது.

சீன மற்றும் அமெரிக்க உறவுகள் தற்போது மிக மோசமடைந்து வருகிறது. சீனாவின் ஹூஸ்டன் தூதரகத்தை மூட வேண்டும் என்ற அமெரிக்காவின் உத்தரவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவில் உள்ள செங்டுவில் அமெரிக்காவின் துணைத் தூதரகத்தை மூடுமாறு சீனா அமெரிக்காவிற்கு கட்டளையிட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம் உத்தரவின்பேரில் சீனாவின் தூதரக கதவை உடைத்து அமெரிக்கா போலீசார் உள்ளே புகுந்து சோதனை நடத்தினர்.

அமெரிக்காவின் இந்த உத்தரவை தொடர்ந்து தூதரகம் மூடப்பட்டதோடு, அதில் வேலை பார்த்தவர்களும் சுமார் 4 மணியளவில் வெளியேறினர். அவர்கள் வெளியேறிய சற்று நேரத்தில் அங்கு வந்த அமெரிக்க காவல் அதிகாரிகள் அந்த தூதரகத்தின் பின்புற கதவை உடைத்து உள்ளே அமெரிக்க அதிகாரிகள் நுழைந்தனர்.

இதனிடையில், தூதரக நடவடிக்கைகளை நிறுத்துமாறு அமெரிக்கா உத்தரவிட்ட சிறிது நேரத்தில், சீன தூதரக ஊழியர்கள் எதையோ போட்டு தீயிட்டு கொழுத்திய விவரம் வெளியாகியுள்ளது. உடனே தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்த நிலையிலும், தீயணைப்பு வீரர்களை தூதரகத்திற்குள் அனுமதிக்க விடவில்லை.

இதனிடையில், அந்த சீன தூதரகம், உளவு பார்க்கும் சென்டராக செயல்பட்டுவந்ததாக கூறப்படுகிறது. பல அமெரிக்க அதிகாரிகள், ஹூஸ்டனில் உள்ள அந்த சீன தூதரகம் விலைமதிக்க முடியாத மருத்துவ ஆராய்ச்சிகளை திருடுவதற்காக சீன அரசால் பயன்படுத்தப்பட்டதாகவும், ஆயில் மற்றும் எரிவாயு தொழில்துறையில் தனது மூக்கை நுழைக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் அந்த தூதரக அலுவலகம், அமெரிக்காவால் நுழைய முடியாத அளவு அதன் அமைப்பு இரும்புக்கோட்டை போல் இருந்ததாகவும், பல முக்கிய உளவு பணிகளை ஒருங்கிணத்து செயல்படுத்தும் தகவல் தொடர்பு மையமாக செயல்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, சீன தூதரகத்தை மூடியுள்ளதோடு மட்டுமல்லாமல், டிக் டாக் போன்ற சீன மொபைல் செயலிகளை தடை செய்யவும், ஹாங்காங்கில் புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டம் காரணமாக கம்யூனிஸ்ட் கட்சி அலுவலர்களுக்கு அஙுகு தடைகளை விதிக்கவும் திட்டமிட்டு வருவது குறிப்பிடதக்கது.